“தொட்டிலை ஆட்டும் கை உலகை ஆள்கிறது” என்ற முதுமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே? இந்த முதுமொழி யாரைப் பற்றி குறிப்பிடுகிறது என்று தெரியுமா? ஆம், மார்ச் மாதம் எட்டாம் திகதி முழு உலகமும் கொண்டாடும் இவ் உலகுக்கு உயிர் கொடுக்கும் ‘பெண்’ பற்றித்தான் அவ்வாறு சொல்லப்படுகிறது. பொதுவாக, ஒரு பெண் மிகவும் மிருதுவானவள் மிகவும் பலவீனமானவள் என்று கருதப்பட்டாலும், ஆனால் உண்மையில், ஒரு பெண் அசைக்க முடியாத தைரியம் மற்றும் வலிமையின் சின்னமாக இருக்கிறாள்.
பிரண்டிக்ஸில் உள்ள நாங்களும் இந்த ஆண்டு மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதில் பெருமிதம் கொள்கிறோம். இது பிரண்டிக்ஸ் பணியாளர்களில் பெண்களே அதிக சதவீதத்தை கொண்டிருப்பதால் மட்டும் அல்ல, மாறாக பிரண்டிக்ஸ் குடும்பம் உண்மையில் பெண்களை மதித்து கொண்டாடுவதால் ஆகும்.
எனவே இந்த ஆண்டு, மகளிர் தினத்தில், எமது உறுப்பினர்களில் சிலரின் வாழ்க்கைப் பயணத்தை இவ் உலகத்துடன் பகிர்ந்து கொள்கிறோம், ஏனென்றால் எங்களுடைய இந்த உறுப்பினர்கள் “பெண்” என்ற கதாபாத்திரத்துக்கு அளவிடமுடியாத பங்கினை மிகவும் பிரகாசத்துடன் சேர்க்கிறார்கள்.
ஹர்ஷனி மதுஷிகா என்று பெயர் கொண்ட அவள், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் உதவியாளராக உள்ளார். இதுவரை தனது வாழ்க்கைப் பயணத்தை நம்மிடம் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
“சின்ன வயசுல இருந்தே மெக்கானிக் ஆகணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு காரணம் எனது அண்ணன்தான். அதனால தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி கற்று பின்னர் பிரண்டிக்ஸ்ல வேலைக்கு சேர்ந்தேன்.ஆனால் இங்கே நிறைய ஆண்களே சேவையில் இருக்கிறார்கள்.அப்புறம் பெண்களுக்காக நடாத்தப்பட்ட மெக்கானிக் படிப்பை பிரண்டிக்ஸ் மூலம் கற்றேன். இன்று, நான் பிரண்டிக்ஸ் வத்துப்பிட்டிவல நிறுவனத்தில் பெண் மெக்கானிக்காக வேலை செய்கிறேன்.”
அறிவிற்க்கு அறிவை சேர்த்து நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் ஷ்யாமா குமாரி ஜயவீர, பிரண்டிக்ஸ் ரம்புக்கனை பினிஷிங் நிறுவனத்தில் பணிபுரியும் உதவியாளர் ஆவார். இது அவளுடைய வாழ்க்கைக் கதை. “நான் எனது பயணத்தை பிரண்டிக்ஸ் ரம்புக்கனை நிறுவனத்தில் இருந்து தொடங்கினேன். பின்னர் நான் PACE திட்டத்தில் சேர்ந்தேன். அந்த திட்டத்தில், தொழில் வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் எவ்வாறு சமநிலைப்படுத்தி கொண்டு செல்வது என்பதை கற்றுக்கொண்டேன். மேலும், NVQ பாடத்திட்டத்தின் மூலம், எனது தொழில் வாழ்க்கைக்கு மேலும் மதிப்புகளை சேர்த்தேன். இன்று நான் என் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.”
தன் கனவுகள் அனைத்தையும் முயற்சியுடனும் துணிச்சலுடனும் நனவாக்கும் பிரசாந்திகா செவ்வந்தியின் கதை இது.
“என்னை நடன ஆசிரியராகப் பார்க்க வேண்டும் என்பது என் பெற்றோரின் கனவாக இருந்தாலும், என் பல்கலைக் கழகக் கனவு நனவாகவில்லை. பின்னர், நான் பிரண்டிக்ஸ் குழுமத்தில் சேர்ந்தேன். இன்று, நான் பிரண்டிக்ஸில் இயந்திர இயக்குநராகப் பணிபுரிவதுடன், களனிப் பல்கலைக்கழகத்தில் வெளிப் பட்டப்படிப்பு பிரிவில் பட்டப்படிப்பு படிக்கிறேன். மேலும், எனது கனவை அடைவதற்காக வார இறுதி நாட்களில் பாடசாலை மாணவர்களுக்கு நடன வகுப்பும் நடாத்தி வருகிறேன்.
கே. கிருஷ்ணாவணி தொழிலக பொறியியல் பிரிவில் தரவு உள்ளீட்டாளராக பணிபுரிகிறார். அவளும் தன் வாழ்க்கைக் கதையை நம்மிடம் இவ்வாறு பகிர்ந்து கொண்டாள்.
“நான் சீதாவக்க, அவிஸ்ஸாவளை பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். நான் தற்போது தொழிலக பொறியியல் பிரிவில் பணிபுரியும், அதே நேரத்தில் வானொலி அறிவிப்பாளராகவும் சேவையாற்றுகிறேன். வானொலி அறிவிப்பாளராக வேண்டும் என்பது எனது சிறுவயது முதல் இருந்த கனவு ஆகும். பெண்களாகிய நாம் அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடன் சுயமாக செயல்பட வேண்டும்”
இவர்கள் அனைவரும் “பெண்” என்ற அடையாளத்தை பிரகாசிக்க வைக்கும் கதாபாத்திரங்கள் ஆவர். நாம் அனைவரும் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்!