உலகில் அநேகமாணவர்களிடம் மிகவும் பிரபலமான மற்றுமொரு விளையாட்டுதான் இந்த Formula One இல்லாவிட்டால் F1 ஆகும். இந்த F1 போட்டிகள் ஏனைய மோட்டார் வாகன ஓட்டப்போட்டிகளில் இருந்து வேறுபட்டு விளங்குவதற்கான காரணம் என்னவென்றால் அதற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள் மற்றும் போட்டி முழுவதும் பயன்படுத்தப்படும் மேம்பட்ட உயர் தொழிநுட்பங்கள் ஆகும். இந்த மேம்பட்ட நவீன தொழில்நுட்ப செல்வாக்கின் காரணமாக, இந்த போட்டிகள் மிகவும் தீவிரமான சுபாவம் கொண்டவை ஆகும்.
இந்த F1 போட்டிகளில் பிரதானமாக கவனத்தை ஈர்க்கும் இரண்டு விஷயங்கள் உள்ளன. அதுதான் போட்டியாளர், அல்லது வாகனத்தை ஓடுபவர். மேலும் இதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனம். F1 போட்டிகளுக்காகவே தயாரிக்கப்பட்ட, மிகவும் பிரசித்தமான வாகன உற்பத்தி செய்யப்படும் வர்த்தக நாமங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மோட்டார் வாகனங்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
போட்டியில் வெற்றி பெறுவதற்கு போட்டியாளரின் ஓட்டம்தான் முக்கிய காரணம் என்று கருதப்பட்டாலும், இந்த வெற்றிக்குப் பின்னால் மிகப் பெரிய அணியே உள்ளது. உயர் நிர்வாகத்திலிருந்து தொடங்கி, பொறியாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் போன்ற பிற நபர்களின் பங்களிப்பின் மூலம் தான் போட்டியாளரின் வெற்றியானது தீர்மானிக்கப்படுகிறது.
இந்த போட்டிகளை நீங்கள் எப்போதாவது பார்த்திருந்தால், போட்டியின் போது சாரதி காரை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு தொழில்நுட்ப பழுதுபார்ப்பதற்காக கொண்டு வருவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். இந்த நேரத்தில், தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு காரைச் சுற்றி ஒன்று கூடுவார்கள், இவர்கள் வாகனத்தின் டயர்களை மாற்றுதல், எரிபொருள் நிரப்புதல், பிரேக் இணை சோதனை செய்தல் போன்ற செயல்களை மேற்கொள்கின்றனர். இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால், இதையெல்லாம் செய்ய அவர்களுக்கு சில நொடிகள் மட்டுமே ஆகின்றது. இந்த நபர்கள் கூடிய விரைவில் மீண்டும் காரை ஓட்டப் பாதைக்கு கொண்டு வர சாரதிக்கு உதவ கடமைப்பட்டுள்ளனர்.
உண்மையிலேயே இந்த செயல்முறையை எமது செயல்பாடுடன் ஒப்பிட்டு பார்த்தல், ஏதேனும் ஒற்றுமைகள் இருப்பதைக் உங்களால் கண்டறிய முடிகிறதா? எங்கள் பிரண்டிக்ஸ் குழுமத்தில் உள்ள அனைவரும் ஒரே இலக்கை நோக்கித் தான் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள். விழித்தெழுந்த தீர்வுகளை வழங்கிவரும் வர்த்தக நாமங்களுக்கு, உயர்தர தயாரிப்புகளை வழங்குவதே எங்கள் நோக்கம் ஆகும். இந்த காரணத்திற்காக, இந்த போட்டியில் பங்கேற்கும் ஓட்டப்பந்தய வீரர்கள் தான் எங்கள் அன்பான தையல் நிபுணர்கள். இந்த தையல் நிபுணர்கள் எமக்காக இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் நாம் அனைவரும் எமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற முயற்சிக்கின்றோம்.
உலகத்தின் முன் தனது வெற்றியைப் பதிவு செய்ய தன்னை அர்ப்பணிக்கும் F1 போட்டியாளரை போலவே, நமது சிறிய நாட்டின் ஒரு உற்பத்தியினை உலகுக்கு கொண்டுச் செல்ல அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரண்டிக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் சொந்த உறுப்பினர்களைப் பற்றி நீங்களும் பெருமைப்படுகிறீர்கள் அல்லவா?