இரத்தம் அல்லது ‘குருதி’ மனித வாழ்க்கைக்கு ஆக்ஸிஜனைப் போலவே மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இரத்தப் பற்றாக்குறையாலும், அவசர அறுவை சிகிச்சைகளாலும், அவசரமக இரத்தம் வழங்கப்படும் நேரங்களிலும் நோயாளிக்கு ஏற்ற இரத்த வகை கிடைக்காமல் மனித உயிர்கள் பலியாவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறான இன்றியமையாத சூழ்நிலைகளில் இரத்தத்தை வழங்கும் முறையாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இரத்த தான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்காக இலங்கையின் இரத்தமாற்றச் சேவை முன்னின்று செயற்படுகின்றது. நாட்டின் குடிமக்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து கைகொடுக்கும் பிரண்டிக்ஸ் நிறுவனமாகிய நாங்கள், பல வருடங்களாக இரத்த தானம் செய்யும் இந்த மாபெரும் செயலில் ஈடுபட்டு வருகிறோம்.
எமது சகோதர சகோதரிகளின் ஆர்வத்தினாலும் அர்ப்பணிப்பினாலும் இலங்கையில் அதிகளவு இரத்த தானம் செய்யும் தனியார் நிறுவனமாக இந்த வருடமும் 12வது தடவையாக அரச அங்கீகாரத்தை பிரண்டிக்ஸ் எம்மால் பெற முடிந்ததை முன்னிட்டு நாம் பெருமிதம் கொள்கிறோம். எமது பிரண்டிக்ஸ் நிறுவனங்களுக்கிடையில் அமுல்படுத்தப்பட்ட ‘லய புபுதன லெய’ எனும் இந்த மாபெரும் வேலைத்திட்டம் இலங்கையின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியதுடன் இரத்த தானம் செய்யும் திறனும் விருப்பமும் உள்ள பலருக்கு அந்த அரிய வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இவ்வாறான அனைத்து நிறுவனங்களுக்கிடையில், கேகாலை மாவட்டத்தில் அதிக இரத்த தானம் செய்யும் நிறுவனமாக ரம்புக்கன பிரண்டிக்ஸ் மற்றும் ஒவ்வொரு வருடமும் இரத்த தான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிறுவனமாக அவிஸ்சாவளை பிரண்டிக்ஸ் விருதுகளைப் பெற்றுள்ளமை குறித்து பிரண்டிக்ஸ் பெருமிதம் கொள்கிறது.
தாமரை தடாக திரையரங்கில் நடைபெற்ற இந்த மாபெரும் விருது விழா, எதிர்காலத்தில் இதுபோன்ற உன்னதமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய தயாராக இருக்கும் எமக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறது. சுகாதார அமைச்சர் மற்றும் தேசிய இரத்தமாற்ற சேவையின் பணிப்பாளர் உட்பட பிரசித்தி பெற்ற அதிதிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்த பரிசளிப்பு விழா எமது அங்கத்தவர்கள் அனைவரினதும் அர்ப்பணிப்பிற்கும் ஆதரவிற்கும் பிரண்டிக்ஸ் எமக்கு கிடைத்த கௌரவமாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பிரண்டிக்ஸில் உள்ள நாங்கள் நாட்டு மக்களுக்காக இதுபோன்ற மதிப்புமிக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய எப்போதும் தயாராக இருக்கிறோம்.