ஒரு தனித்துவமான மற்றும் நெகிழ்வான உலோகமான பாதரசத்தைப் போலவே, பிரண்டிக்ஸின் “ரசதிய” கோப்பையின் கதையும் தனித்துவமானது. முதலில் அந்த கோப்பையின் ஆரம்பம் பற்றி தெரிந்து கொள்வோம். பிரண்டிக்ஸ் உறுப்பினர்களாகிய உங்களுக்குத் தெரியும், “ரசதிய” விழா என்பது ஆண்டின் விருது வழங்கள் திருவிழாவாகும், இது பிரண்டிக்ஸ் குழுமத்தின் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையின் மதிப்பை மேலும் எடுத்துக்காட்டுகிறது. 2011ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 9 ஆண்டுகளாக இந்த “ரசதிய” விழாவை அதிக ஆற்றலுடனும் ஆர்வத்துடனும் நடத்தி வருகிறோம். இந்த விழா முதலில் 2011 இல் “ரசதிய” கோப்பை கைப்பந்து போட்டியாக தொடங்கியது. அதனால்தான் “ரசதிய” கோப்பை கைப்பந்து போட்டி “ரசதிய” விழாவின் சிறப்பு அம்சமாகும். இத்தனை ஆண்டுகளில், “ரசதிய” கோப்பை கைப்பந்து போட்டி மீண்டும் மீண்டும் அனைவரின் ஆற்றலையும் வலிமையையும் புதுப்பிக்க ஒரு காரணமாக இருந்தது.
“ரசதிய” கோப்பை ஒரு தனியார் துறை நிறுவனத்தின் உறுப்பினர்கள் அதிக அளவில் ஒன்று கூடும் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு, எங்கள் உறுப்பினர்களின் வலிமை மற்றும் விளையாட்டுத் திறனை மீண்டும் பரிசீலித்து பார்க்கும் வகையில் 2024 ஆம் ஆண்டில் “ரசதிய” கோப்பை கைப்பந்து போட்டியை நடத்த முடிவு செய்துள்ளோம்.பிரண்டிக்ஸ் உறுப்பினர்களின் திறன்களை உயர்த்துவதற்கு தொடர்ந்து தயாராக இருக்கும் நாம், இந்த ஆண்டும் “ரசதிய” கோப்பை கைப்பந்து போட்டியை விறுவிறுப்புடனும் ஆர்வத்துடனும் நடத்துவதற்கான ஆயத்தங்களை செய்து வருகிறோம். இந்த ஆண்டு பிரண்டிக்ஸ் “ரசதிய” கோப்பை கைப்பந்து போட்டியும் முந்தைய போட்டிகளைப் போலவே ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.