மானுடத்தை பாதுகாக்கும் - நீர் உதவித் திட்டம்

மனிதகுளத்தின் மறுமலர்ச்சிக்கு எப்பொழுதும் கைகொடுக்கும் பிரண்டிக்ஸ், எமது மனிதநேய செயற்றிட்டமானது இம்முறை இரம்புக்கனை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்த மனிதநேய வேலைத்திட்டமானது இப் பிரதேச மக்களுக்கு தேவைப்படும் நேரங்களில் அவர்களுக்குப் உதவுவதற்கு எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் செயற்படும் செயற்திட்டமாகும். மேலும், 2016 ஆம் ஆண்டு, அரநாயக்க சாமசர மலையின் துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தின் பின்னர் எடெல்லவத்தை தோட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பிரதான தேவையாக அமைந்த சுத்தமான குடிநீர் தேவையை பிரண்டிக்ஸ் இரம்புக்கன நிறுவனத்தினால் பூர்த்தி செய்ய முடிந்தமை எமக்கு அளப்பரிய மகிழ்வினை தந்திருந்தது. இந்த மாதிரி கிராமத் திட்டத்தால் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவது மிகவும் பெருமைக்குரியது.

இது மாத்திரமன்றி, இரம்புக்கன பிரதேசத்தில் உள்ள இரண்டு பின்தங்கிய பாடசாலைகளான புவக்மொடே மத்திய பாடசாலை மற்றும் திஸ்மல்பொல மத்திய பாடசாலை ஆகியவற்றிற்குத் தேவையான சுத்தமான குடிநீர் திட்டத்தையும் பிரண்டிக்ஸ் இரம்புக்கன நிறுவனம் நிர்மாணித்துள்ளது. அது மாத்திரமன்றி அந்த பாடசாலைகளிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலைப் பைகள் பிரண்டிக்ஸ் ஆதரவுடன் வழங்கப்பட்டன.

அத்துடன் இரம்புக்கனை பிரதேசத்திற்கு சிறந்த சேவையை வழங்கி வரும் இரம்புக்கனை வைத்தியசாலைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் நாம் மறக்கவில்லை. அதன்படி இரம்புக்கனை ஆதார வைத்தியசாலையின் 4வது வார்டு வளாகத்தை நவீனமயப்படுத்தி வைத்தியசாலைக்கு வழங்க ஏற்பாடு செய்தோம். பிரண்டிக்ஸில் உள்ள நாங்கள், நல்லெண்ணத்துடன் இதைச் செய்து வரும் விழிப்புள்ள மக்களுக்காக இதைச் செய்ய உறுதிபூண்டுள்ளோம்.

Facebook
Facebook