ஒரே உள்ளம் கொண்டவனுக்கு நண்பன் என்ற ஒற்றை வார்த்தை..அப்படியானால் நண்பனுக்கு இணையான உள்ளம் யாருக்கு இருக்க வேண்டும்?
ஒரு படைப்பாளி ஒரு கவிதையையோ, இலக்கியத்தையோ உருவாக்கினால், அதைப் பாராட்டவும் விமர்சிக்கவும் கூடிய வாசகர் கூட்டம் ஒன்று இருக்க வேண்டும்… அப்படித்தான் ஒரே மாதிரியாக சிந்திக்கக்கூடிய எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழு உருவாகிறது.
நாகரீகம் சிறந்து விளங்கும் எந்தவொரு நாட்டிலும் இலக்கியம் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
நாமும் அவ்வாறான நாகரீகமான ஒரு மக்கள் கூட்டமே..
அநுராதபுர சகாப்தத்தில் இருந்து, தம்பதெனி குருநாகல் கோட்டை போன்ற இலக்கிய சகாப்தங்கள் அதற்கு ஏராளமான சான்றுகளைத் தாங்கி நிற்கின்றன.
கோட்டை சகாப்தம் சிங்கள இலக்கியத்தின் பொற்காலமாக மிளிர்வதற்கு அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட தலைசிறந்த படைப்புகளே காரணமாகும்.
இலக்கியத்தால் வாசகர்களின் இதயங்கள் பரவசப்படுகின்றன, உணர்திறன் மேம்படுத்தப்படுகிறது, ரசனை திறன் மேம்படுகிறது, மொழி மற்றும் கலாச்சாரம் வளர்க்கப்படுகிறது.
ஆனால் நாம் இப்போது இலக்கியத்திலிருந்து விலகி இருக்கிறோமா?
இல்லவே…. இல்லை..
இலக்கியம் பயன்படுத்தப்படும் முறை மாறிவிட்டது.
புதுமையான தொழில்நுட்பம் புதிய படைப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழியை நமக்குக் காட்டியது.
புதிய வடிவமைப்புகளை பலர் பார்க்கும் வகையில் டிஜிட்டல் யுகம் உருவாக்கப்பட்டுள்ளது.
விழித்தெழுந்த பிரண்டிக்ஸ் உறுப்பினர்கள் என்பவர்கள், மேல் குறிப்பிட்ட ஒத்த உள்ளம் கொண்டவர்கள்.
அவர்கள் புதிய படைப்புக்களை உருவாக்குவதில் மிகவும் திறமையானவர்கள்.
அதனால்தான் சைபர்ஸ்பேஸில் viyaman.lk என்று ஒரு இடம் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் புதுப்பித்து உருப்பெறும் இணையத்தை அழகாக்குவதும், புதுப்பிப்பதும் நமது சொந்த தோழர்கள் என்பது நமது அதிர்ஷ்டம் ஆகும்.
எனவே இந்த இலக்கியமாதத்தில் இன்னும் பல அழகான படைப்புகளை எம்மால் கண்டு ரசிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
மொஹான் சுரவீர.