அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால்
அதற்கும் அப்பால் ஒரு அதிகாரம்….
அதுவே எனது அன்னையின் அன்பின் பால்….
பாலூட்ட மடியில் வைத்ததிலிருந்து – ஒரு
பாவைக்கு என்னை தந்துவிட்ட பிறகும் தொடரும்
நேசம்
எனது ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் கூறும்
கண்முன் தோன்றும் இறைவி
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உறவு
என் ஏழு பிறவியிலும் வேண்டும் இறைவா!
அம்மா என் அன்பின் சிகரம்….
மேகலாதேவி
பிராண்டிக்ஸ் மட்டக்களப்பு