பெற்றோர் பாசம்

ஆயிரம் வார்த்தைகளில்
யாரை பற்றி வேண்டுமானாலும்
எழுதலாம்!
ஆனால் என்னை எழுதியவர்களுக்கு
நான் என்ன எழுத.

எதை கொடுத்தும் வாங்கமுடியாத
அரியானம் தந்தையின் தோள்;
யாரும் இழக்க விரும்பாத தொட்டில்
அன்னையின் மடி.

நீ தேடி சென்றாலும் விலகி செல்வது
மற்றவர்கள்!
நீ விலகி சென்றாலும் உன்னை தேடி வருவது
பெற்றவர்கள்

உலகில் யாராலும் கொடுக்க முடியாத
விலை மதிப்பில்லாத பொக்கிஷம்
பெற்றோரின் அன்பும் அரவணைப்பும்

உங்களின் தியாகம் அர்ப்பணிப்பு
வளர்ப்பு கவனிப்பு ஆதரவு பாசம்
அனைத்திற்கும் நன்றி கூற
வார்த்தைகள் இல்லை ..

சத்குணானந்தம் மேகலாதேவி

பிராண்டிக்ஸ் மட்டக்களப்பு

Facebook
Facebook