ஆரோக்கியமான மனம் உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எனும் பழமொழியினை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்…. உண்மையிலேயே ஆரோக்கியம் என்றால் என்ன? ஒருவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் மற்றும் மனநோய்கள் இல்லாதிருந்தால், அவரை ஆரோக்கியமானவர் என்று அழைக்கலாம். சற்று யோசித்துப் பாருங்கள் உங்களுக்கு தலைவலி, சளி போன்ற ஏதேனும் அசௌகரியம் இருந்தால் உடனே மருத்துவரைப் பார்த்து மருந்து எடுத்துக் கொள்வீர்கள். உடலில் காயம் ஏற்பட்டால், அது குணமாகும் வரை சிகிச்சை பெற்றுக்கொள்வீர்கள். இவை அனைத்தும் நம் உடல் நோய்வாய்ப்படும் போது. ஆனால், உங்கள் உடல் போன்றே மனமும் நோய்வாய்ப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் அல்லது நீங்கள் அதில் அதிக கவனம் செலுத்தாமல் இருக்கலாம். உங்களுக்கு தெரியுமா? உடலில் ஏற்படும் நோய்கள் போலவே, அதிக கோபம், தூக்கம் வராமல் இருப்பது, வாழ்க்கையில் சலிப்பு ஏற்படுவது, அன்றாட விஷயங்களை சீக்கிரம் மறந்துவிடுவது போன்றவை மனநலப் பிரச்னைகள் எனப்படும். இந்த மாதிரியான பிரச்சனைகளால் யாரேனும் அவதிப்பட்டால், காலப்போக்கில் இவை மன அழுத்தம், பதட்டம் போன்ற மன நோய்களாக மாறிவிடும். இறுதியில் என்ன நடக்கிறது என்றால், நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உங்களை அறியாமல் ஒரு நோயாளியாக மாறுகிறீர்கள். அது மட்டுமின்றி, அன்றாடச் செயல்பாடுகளான வேலை, குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட உறவுகள் என அனைத்தும் குழப்பமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது.

பெரும்பாலான சமயங்களில், ஒரு நபர் தனது பிரச்சினைகள் அல்லது குறைகளை குறைக்க நம்பகமான நபரோ அல்லது சேவையோ இல்லாததால் இதுபோன்ற பிரச்சினைகளால் மனதளவில் பாதிக்கப்படுகிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்றால், நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உங்களை அறியாமல் ஒரு நோயாளியாக மாறுகிறீர்கள். இப்போது மனநலம் ஆரோக்கியமாக இருப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள். இன்று நாம் இதைப் பற்றி ஒரு சிறப்பு காரணத்திற்காக பேசுகிறோம். அதுதான் அக்டோபர் 10ஆம் திகதி “உலக மனநல தினம்”. இன்று உலகம் முழுவதும் இதைப் பற்றி பேசுகிறது. மேலும், நீங்கள் ஏதேனும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், மனநல சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, பிரண்டிக்ஸ் நிறுவனத்திற்குள் இந்த சேவைகளைப் பெறுவதற்கான வசதியையும் உங்களுக்கு வழங்கியுள்ளது. உங்களைத் தொந்தரவு செய்யும் சிறிய பிரச்சனை அல்லது சிக்கல்கள் இருந்தால், நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உள்ள உளவில் ஆலோசகரின் சந்திப்பை முன்பதிவு செய்வதில் தாமதிக்க வேண்டாம். அவர்கள் எப்போதும் உங்கள் குறைகளை கேட்கத் தயாராக இருக்கிறார்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் நினைத்தால், உங்களுக்கு நெருக்கமானவர்களின் மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சியைப் பற்றி நீங்கள் நினைத்தால், அதற்காக கடினமாக உழைத்தால், முதலில் உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மகிழ்ச்சிக்காக உங்களை அர்ப்பணிக்கவும். அப்போது நீங்களும் உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும்.

ருவனி ஜயலத்
மனநல ஆலோசகர்

Facebook
Facebook