தங்களுக்கென்றே தனித்துவமான திறன்களைக் கொண்டவர்கள் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையை வெல்வதற்கும், தங்கள் குடும்பத்திற்காகவும், தமது அன்பானவர்களுக்காகவும் தங்களை அர்ப்பணிக்க இருமுறை சிந்திப்பது இல்லை. எனவே, பிரண்டிக்ஸில் அவர்கள் செய்யும் தொழிலுக்கு மேலதிகமாக, தங்கள் பொழுதுபோக்காக ஒரு வணிகத்தை நடத்தி குடும்பத்திற்கு இன்னுமொரு உந்துசக்தியாக மாறும் உறுப்பினர்கள் உள்ளனர். பிரண்டிக்ஸ் ஊடாக மட்டுமன்றி அரசாங்கத்தின் தொழில் முனைவோர் அபிவிருத்தி அதிகாரசபையின் ஆதரவுடன் சுயதொழில்களை அபிவிருத்தி செய்வதற்கும் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். அவ்வாறு பல்வேறு பயிற்சி பட்டறைகளை நடத்துவதன் மூலம், திறன்களை ஒரு சுயதொழிலாக மாற்றுவதற்கான அறிவையும் திறமையையும் மேம்படுத்துவதற்கு கைகொடுப்பது எமக்கு மிகவும் பெருமையாக உள்ளது.