வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் முன்னேற வேண்டும் என்ற தேவை இருந்தால் வெற்றியை நோக்கி செல்லலாம். மிகவும் பின்தங்கிய பிரதேசமான திருகோணமலையில் உள்ள பதவிய கிராமத்தில் பிறந்து வாழ்வின் தடைகளை வென்று வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்ட பிரண்டிக்ஸ் வத்துபிட்டிவல மனிதவள பிரிவின் அதிகாரி மதுஷான் வீரசிங்க பற்றிய தகவல்களை இம்முறை “வியமன் TV” யின் விழித்தெழுந்த நாம் “பிபிதுனு அபி” நிகழ்ச்சியின் ஊடக உங்களுக்காக தருகின்றோம்.
“பொதுவாக, ஒரு மனிதனாக வாழ்க்கையில் தடைகளை எதிர்கொள்ளும் போது, மரபுவழியில் மக்கள் கொண்டிருக்கும் தடைகளை விட மாறுபட்ட தடைகளை நான் சந்தித்து முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது, நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் ஒரு பிரதேசமாக பதவிய மாறியிருந்தது. படிக்கும் கால பருவத்தில் காடுகளுக்குள் ஒளிந்து கொண்டு பகல் பொழுதைக் கழிக்க வேண்டிய நேரங்கள் என் வாழ்வில் அதிகமாக இருந்தன.
பயங்கரவாதம் காரணமாக பயத்துடன் கழித்த காலத்தில், நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என் உள்ளத்தில் இருந்தது. இலங்கையின் சிறப்பு இராணுவப் பிரிவான சிறப்புப் படையில் இணைவதற்கு நான் முடிவெடுக்கிறேன். அதன் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அணி பயிற்சியாளராக 6 வருட சேவையை முடித்துள்ளேன். துரதிர்ஷ்டவசமாக, நான் அந்த நேரத்தில் ஒரு சிறப்பு பயிற்சியில் காயம் அடைந்து, அந்த துறைக்கு விடைகொடுக்க நேர்ந்தது.