அன்பென்ற மொழிக்குள்
அகிலமே அடங்கி போகும்
உன் சிறு அன்பால்
கொடியவரையும் குழந்தையாக
மாற்றிவிடலாம்
அழகான மொழி என்றல் அது
அன்பென்ற மொழி மட்டுமே!
அது யாரை வேண்டுமானாலும்
அடைத்து வைக்கும்
அதன் சிறகுக்குள்
பெரும் கோபம் கொண்டவரையும்
அன்பாலே அடக்கி விடலாம் …
எந்த ஆயுதத்திற்கும்
அடிபணியாதவர்களையும் அன்பெனும்
ஆயுதத்தால் பணிய வைத்து விடலாம்..!
கருவறை முதல் கல்லறை வரை …
உனை சுமக்கும் தாய் அன்பு !
அந்த தாயின் அன்பு இல்லை என்றல்?
உன் வாழ்வு கருவறையோடு முடிந்திருக்கும்
இனம், மொழி அறியாது அன்பு!
சிறு புல்லில் கூட பூக்கலாம்
பெரும் கல்லில் கூட பூக்கலாம் …
எங்கு வேண்டுமானாலும் பூக்கலாம் அன்பு!
அம்மா என்ற சொல்லுக்கு
நிகரானது அன்பு என்ற சொல் !
அன்பு கொண்டு எதை வேண்டுமானாலும்
உன்வசம் ஆக்கி கொள்ளலாம்
பூமிக்கு அழகு!
பூக்கள் மட்டும் அல்ல…
அன்பும் கூட
அன்பு மட்டும் இல்லை என்றல்
என்றே அழிந்திருக்கும் இந்த பூமி!
அன்பு ஒளிரும் இடத்தில்
கடவுளை பார்க்கலாம்….
கடவுள் உன் உருவிலும் தெரியலாம்
நீ அன்பு செய்தால்.
நன்றி
நு. கேனுஷா
பிராண்டிக்ஸ் மட்டக்களப்பு