பெற்றோர் பாசம்

அம்மா என்று அழுகின்றேன்
அப்பா என்று அழைக்கின்றேன்
இருவரும் இல்லாமல் இதய வலியால்
துடிக்கிறேன் பாசம் இல்லாமல்

தினம் தினம் இறைவனை வேண்டுகின்றேன்
இறைவா! என் பெற்றோருடன் மறு வாழ்வில்
மகளாய் பிறக்க வேண்டும் என்று
கண்ணீரோடு வாழ்கின்றேன்

நானும் பிள்ளையின் தாய் என்று
நேசப்பட்டவனோ நாசம் பண்ணிவிட்டான்
வாழ்க்கையை
இப்போது உணர்கின்றேன் பெற்றோரின் பாசத்தை

உங்களோடு இருக்கும் காலம் பொன்னானது
அதை நான் இழந்து விட்டேன் – என் வாழ்வில்
இத் தருணத்தில் எதிர் பார்க்கின்றேன் – என்
தந்தையின் அரவணைப்பை

அம்மா என்ற வார்த்தை சும்மா இல்லை
அது நம் வாழ்வில் பல அர்த்தம்
அப்பா என்ற நாமம் பொன்னான வார்த்தை
நம் வாழ்வில் உயர்வதற்கு முதல் ஏணிப்படி

அன்பு கொண்ட நெஞ்சமே!
உணர்ந்திடு மெளனமாய்
பெற்றோரின் பாசத்தை.

A.K.F. மஜிதா
பிராண்டிக்ஸ் மட்டக்களப்பு

Facebook
Facebook