ரசதிய கிண்ணத்தின் மாபெரும் வெற்றி நாள்

பிரண்டிக்ஸ் உறுப்பினர்கள் பல மாதங்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த “ரசதிய” கிண்ணத்தின் கரப்பந்தாட்ட போட்டித்தொடரின் இறுதிப்போட்டி அண்மையில் மிக பிரமாண்டமான முறையில் நிறைவடைந்தது. அங்கு
இளமையின் ஆற்றலையும் உற்சாகத்தையும் சிறப்பாகக் காணக் கூடியதாக அமைந்திருந்தது. பிரண்டிக்ஸ் குழுமத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அலாதியான ஆர்வமும், அளப்பரிய அர்ப்பணிப்பும் மற்றும் எதற்கும் ஈடான திறனும் கொண்ட கரப்பந்தாட்ட விளையாட்டு வீரர்களைக் கொண்ட 25 அணிகள் அன்றைய தினம் போட்டியிட்டன.

மஹரகம இளைஞர் சேவை மன்ற மைதானத்தில் அதிகாலை ஆரம்பமான பிரண்டிக்ஸ் “ரசதிய” கிண்ணத்தின் இறுதிப் போட்டிகள் பிற்பகல் 3 மணியளவில் உச்சக்கட்டத்தை எட்டியதுடன் இறுதி இரு அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பமானது. முதலில் பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டி தொடங்கியது. பெண்களுக்கான “ரசதிய” கிண்ண கரப்பந்தாட்ட போட்டியில், மிகவும் திறமையான மற்றும் உற்சாகமான பிரண்டிக்ஸ் அவிஸ்ஸாவளை மகளிர் அணி போட்டியின் சம்பியனாக முடிசூட்டப்பட்டது. இரண்டாம் இடத்தை பிரண்டிக்ஸ் இரம்புக்கன அணி பெற்றது. பின்னர் “ரசதிய” கிண்ணத்தின் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டி சூடுபிடிக்கத் தொடங்கியது. பரபரப்பான போட்டியின் பின்னர் ஆண்களுக்கான “ரசதிய” கிண்ணத்தின் பெருமைக்குரிய மகுடத்தை Brandix Essential இரத்மலானை சென்டர் அணி தன்வசப்படுத்தியது. இதில் சரிநிகராக போட்டியிட்ட பிரண்டிக்ஸ் மட்டக்களப்பு அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும் திறமைசாலிகளுக்கும் விருதுகளை வழங்க பிரண்டிக்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் மனிதவள திணைக்களத்தின் உயர்மட்ட முகாமைத்துவம் உட்பட பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

கரப்பந்தாட்ட போட்டித்தொடரில் போட்டியிடும் அணிகள் மற்றும் வெற்றி பெற்ற அணிகள் தவிர, இந்த ஆண்டு மற்றொரு சிறப்பு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நிறுவன இல்லத்தை உருவாக்கிய பிரண்டிக்ஸ் ஏகலை வூவன் சென்டருக்கும், இந்த போட்டித்தொடரில் சிறந்த ஊக்கத்தை வழங்கிய பிரண்டிக்ஸ் இரம்புக்கன அணியினருக்கும் சிறப்புப் பாராட்டு மற்றும் கெளரவிப்பு செய்யப்பட்டது. வெற்றியாளர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்கள் இருவரையும் மகிழ்விப்பதற்காக பிரண்டிக்ஸ் குழுமம் DJ இசை இரவை ஏற்பாடு செய்திருந்தது.

எனவே, பிரண்டிக்ஸ் இன் உறுப்பினர்கள் காலை முதல் உற்சாகத்துடன் மகிழ்வதற்கு இடமளிக்கும் வகையில் அமைந்த “ரசதிய” கிண்ண கரப்பந்தாட்ட போட்டித் தொடர் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்தது. எதிர்காலத்தில் இளைஞர்களின் ஆற்றலும் திறமையும் நிரம்பிய ஒரு அற்புதமான போட்டித்தொடரை ஏற்பாடு செய்ய நாங்கள் நிச்சயமாக தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். தங்கள் ஆற்றலையும் நேரத்தையும் செலவழித்து போட்டியை ஆதரித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Facebook
Facebook