ஆற்றல் (எரிசக்தி) உலகின் மிக மதிப்புமிக்க வளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த ஆற்றலின் முக்கிய ஆதாரமாக புதைபடிவ எரிபொருள் உள்ளது. அவை மீண்டும் மீண்டும் உருவாக்கப்படாததால், உலகில் ஆற்றலில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சூரிய ஒளி போன்ற பிற மாற்று எரிசக்தி ஆதாரங்கள் இருந்தாலும், அவை புதைபடிவ எரிபொருட்களைப் போலவே பயன்படுத்தவும் கையாளவும் கடினமாக உள்ளன, எனவே புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் உண்மையான சிக்கல் உள்ளது.
இந்தக் காரணங்களால் உலகம் முழுவதும் எரிசக்தி நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆற்றல்களில் மின்சாரம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இன்று இலங்கையில் மின்சார பாவனையின் கவனக்குறைவு குறித்து அரசாங்கம் அடிக்கடி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது இந்த ஆற்றலின் தேவை மற்றும் பெறுமதிக்கு உதாரணமாகும். எனவே, பொறுப்புள்ள குடிமக்களாக, பணத்தையும் ஆற்றலையும் சேமிப்பதற்கான தீர்வாக, மின்சாரத்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கு,
– தேவையில்லாத மின்விளக்குகள், மின்விசிறிகளை அணைத்தல்.
– காற்று பதனாக்கி (ஏர் கண்டிஷனிங்) வெளியே போகாதபடி கதவுகள் மற்றும் ஜன்னல்களை சரியாக மூடவேண்டும்
– இடைவேளையின் போது மின் இயந்திரங்களை நிறுத்தி வைத்தல்.
– துப்புரவு நடவடிக்கைகளில் தேவைப்படும் போது மட்டுமே அழுத்தப்பட்ட காற்று இயந்திரத்தை (கம்பிரஷர்) பயன்படுத்தல்.
– LED மின் விளக்குகளைப் பயன்படுத்துதல்.
இது போன்ற சிறிய விஷயங்கள் நிறைய பணத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்துகின்றன. பொருளாதார பலன்களும் கிடைக்கும். எனவே, இந்த மின்சார சேமிப்பு முறைகளை உங்கள் வீட்டிற்கும் நிறுவனத்திற்கும் ஒரே மாதிரியாகப் பின்பற்றி வந்தால், பலன்கள் உங்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் கிடைக்கும்.