பிரண்டிக்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. அஷ்ரொப் ஒமார் அவர்களின் புதுவருட வாழ்த்துச் செய்தி

அன்புள்ள உறுப்பினர்களே,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

2025 புதுவருடத்துக்குள் தடம் பாதிக்கும் இத் தருணத்தில், நாம் இதுவரை கடந்து வந்த பயணத்தை சற்று நினைவு கூர்வோம். 2024 இல், பல மாற்றங்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்தோம். இங்கு திறமையான மூலோபாயம், திறமை மற்றும் கலாச்சாரம் போன்றவை எமது அடித்தளத்தை பலப்படுத்திய காரணிகள் ஆகும். அதேநேரம், எங்கள் தந்தை திரு எம்.எச். உமரின் பிரிவு எங்களை மிகவும் துயரத்துக்குள்ளாக்கியது. இருப்பினும், அவரது மதிப்புகள் இன்னும் நம்மை வழிநடத்துகின்றன. மலரும் இந்த புது வருடத்தில், நாம் பெற்ற வெற்றிகளையும், சாதனைகளையும் அடிப்படையாகக் கொண்டு, திறமையின்மைகளை முறியடித்து, ஆர்வத்துடனும் அயராத முயற்சியுடனும் முன்னேற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால்,முதலில் நாம் செய்யும் வேலையின் மீது விருப்பமும், ஆசையும் இருக்க வேண்டும். அந்த உணர்ச்சிமிக்க ஆசைதான் எம்மை முன்னோக்கி நகர்த்துவதற்கான நோக்கத்தைத் தருகிறது. அத்துடன் நீண்ட கால சவால்களை எதிர்கொள்ளும் வலிமையையும் தருகிறது. வெற்றி மிகவும் விரைவாக நம்மை தேடி வருவதில்லை. இது நேரம், முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் பல தவறுகள் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களின் விளைவாக அமைகிறது. இந்தப் பயணத்தில் திறமை இருந்தால் மட்டும் போதாது. இலக்குகளை அடைவதற்கான ஆர்வமும் இடைவிடாத முயற்சியும் இருத்தல் அவசியம் ஆகும்.
பிரண்டிக்ஸில் நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளோம். அந்த பயணங்களின் ஆரம்பம் ஒரு தனிப்பட்ட உந்துதலில் வேரூன்றியுள்ளது. தனிப்பட்ட குறிக்கோளாகத் தொடங்கிய இப் பயணம், மிகவும் குறுகிய காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஆர்வமுள்ள விருப்பமாக மாறியது.
நாங்கள் உருவாக்கும் புதிய தயாரிப்பு அல்லது வணிகத் தீர்வுக்கு வாடிக்கையாளரின் திருப்தியான பதிலைப் காண்பதே நாம் எதிர்பார்க்கும் விளைவு ஆகும். எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்குவதையே நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த முயற்சி எம் அனைவரையும் பெரிதும் பாதித்தது. அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடினமாக உழைப்பது அவர்களுக்குப் பலனளிப்பது மட்டுமல்லாமல்; இது ஒரு குழுவாக, ஒரு நிறுவனமாக எங்களுக்கு பெரும் மதிப்பைத் தருகிறது. நாங்கள் ஒன்றாகக் கற்றுக்கொண்டோம், ஒன்றாக முன்னேறினோம், நான் எதிர்பார்த்ததனை விட அதிகமாக சாதித்தோம். இன்றுவரை, அதுதான் என்னை இயக்கும் அடிப்படை குறிக்கோளும் இதுதான்: இது பூர்த்தி செய்யப்படாத தேவைகளை பூர்த்தி செய்வதற்கு விழித்தெழுந்த தீர்வுகளை வழங்குவதன் மூலம் நமது நாடு, சமூகம் மற்றும் நுகர்வோருக்கு நன்மை தந்து கூட்டாக வெற்றியை மேம்படுத்துவது ஆகும்.
பிரண்டிக்ஸ் குழுமத்திற்கான எனது நோக்கம் மிகவும் எளிமையானது: புத்தாக்கம், நெகிழ்வு மற்றும் சிறந்து விளங்குவதன் மூலம் எப்பொழுதும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை விஞ்சிய தயாரிப்புகளை வழங்குவது ஆகும்.
கடந்த ஆண்டு, நாம் எமது வணிக உத்தியை மிகவும் எளிதாக்கினோம். நாம் திறமையை மேம்படுத்துவதில் முதலீடு செய்து, பிரண்டிக்ஸ் எமதுத்துவம் மூலம் எங்கள் பெருநிறுவன கலாச்சாரத்தை வரையறுத்தோம். எமது எதிர்காலத்தை முன்னோக்கிப் பார்க்கும்போது, எமது கவனம் வேலை மற்றும் செயல்முறைகளை மேலும் எளிதாக்குவது, புத்தாக்கத்திற்கு இசைவக்கன மனநிலையுடன் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துதல் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் செயல்பாடுகளின் மையமாக இருக்கும் எங்கள் உறுப்பினர்களாகிய உங்களைக் கவனித்துக்கொள்வதில் உன்னிப்பாக இருக்க வேண்டும் என்பதே ஆகும்.
நான் முன்னர் கூறியது போல், நாம் ஒவ்வொருவரும் எமது தையல் நிபுணர்களை ஃபார்முலா ஒன் டிரைவர்கள் என்று நினைத்துக்கொள்வோம். அவர்களின் துல்லியம் மற்றும் கைவினைத்திறன் எங்கள் வெற்றிக்கு முக்கியமாகும். ஒரு ஃபார்முலா ஒன் ஓட்டுநர் திறமையான குழுவை நம்பியிருப்பது போல, எங்கள் தையல் உறுப்பினர்கள் எங்கள் அணியில் உள்ள மற்றவர்களை நம்பியிருக்கிறார்கள். இயந்திரங்களை சரியாக இயங்க வைக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்கள் முதல் சரியான நேரத்தில் ஆர்டர்களைப் பெறும் எங்கள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணியாளர்கள் வரை அனைவரும் இதில் அடங்குவர். ஏனைய அனைவரும் உற்பத்தி உறுப்பினர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், மேலும் அவர்களின் பங்களிப்புகளை மதிப்பிடுவதன் மூலம் அவர்கள் உண்மையிலேயே ஆதரவையும் அதிகாரத்தையும் உணரும் சூழலை உருவாக்க வேண்டும். அவர்கள் வெற்றி பெறும்போது, நாம் அனைவரும் வெற்றி பெறுகிறோம்.
நாங்கள் முன்னேறும்போது, நீங்கள் ஒவ்வொருவரும் பிரண்டிக்ஸில் உங்கள் நோக்கத்தைக் கண்டு கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் பணி அர்த்தம் அல்லது தேவையுடன் இணைந்தால், விடாமுயற்சி மற்றும் சிறப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆற்றலை யாராலும் தடுக்க முடியாது.
வெற்றி என்பது ஒரு புத்திசாலித்தனமான மேதையாக இருப்பது மட்டுமல்ல – இது அடிப்படைகளில் தேர்ச்சி பெறுவதும் தேவையற்ற தவறுகளைத் தவிர்ப்பதும் ஆகும். உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் இதற்கு சிறந்த உதாரணம். செரீனாவைப் பொறுத்தவரை, டென்னிஸ் என்பது ஒவ்வொரு கணமும் முழுமையைத் துரத்துவது அல்ல, ஆனால் அடிப்படைகளை நாளுக்கு நாள் தேர்ச்சி பெறுவது, நிலைத்தன்மை, சவால்கள் வரும்போது ஓடிவிடாமல் . அமைதியாகவும், கவனம் செலுத்தவும், நிலையானதாகவும் இருப்பதன் மூலம், விளையாட்டு நமக்குச் சாதகமாக வெளிப்படும்.
மலர்ந்த இந்த 2025 புது வருடம், பிரண்டிக்ஸ் குடும்பத்தின் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், பிற துணைச் சேவைகளை வழங்கும் அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான புது வருடமாக அமைய எனது நல் வாழ்த்துக்கள்.

அஷ்ரொப் ஒமார்
பிரண்டிக்ஸ் குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி.

Facebook
Facebook