மனிதனின் தொடர்பாடலுக்கு மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றான வானொலிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அது பிப்ரவரி 13 ஆகும். எனவே இந்த சிறப்புக்குரிய நாள் நமது பிரண்டிக்ஸ் வானொலிக்கும் ஒரு மதிப்புமிக்க நாள் ஆகும். கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, பிரண்டிக்ஸ் வானொலி, கிட்டத்தட்ட 20,000க்கும் அதிகமான பிரண்டிக்ஸ் குழும உறுப்பினர்களுக்கு, இன்பம் மற்றும் மகிழ்ச்சிக்காக பரந்த அளவிலான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இதனால் நாம் மிகவும் பெருமையாகவும் இருக்கிறோம், மேலும் உங்களுக்காக இன்னும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்க தயாராக இருக்கிறோம் என்று மகிழ்வுடன் கூற விரும்புகிறோம்.
அனைத்து கேட்போருக்கும் தொடர்ந்து பொழுதுபோக்கை வழங்கும் காலத்துக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை வழங்க, பிரண்டிக்ஸ் வானொலியின் ரத்மலான நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறமையான தொகுப்பாளர்களான சமித் ரங்கநாத், இரம்புக்கனை நிறுவனத்தைச் சேர்ந்த துலாஞ்சலி பெல்பிட மற்றும் மீரிகம நிறுவனத்தைச் சேர்ந்த எரங்க அதிகாரி ஆகியோர் எமது ஒருங்கிணைப்பு உறுப்பினர்களாகப் பணியாற்றுகின்றனர். இவர்கள் மட்டுமல்ல, இலங்கையின் பல சிரேஷ்ட மற்றும் பிரபலமான அறிவிப்பாளர்கள் எங்களுடன் கைகோர்த்து, செவிமடுப்பவர்களின் மகிழ்ச்சிக்காக உழைத்துள்ளனர். எனவே, நீங்கள் அனைவரும் அறிந்தபடி, பிரண்டிக்ஸ் வானொலியில் உள்ள நாங்கள், இன்னுமொரு தசாப்தம் அல்லது அதற்கு அப்பாலும் பிரண்டிக்ஸ் குரலை வானொலி முழுவதும் எதிரொலிக்கச் செய்ய ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் கைகோர்க்கிறோம். எனவே, வானொலிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த சிறப்புமிக்க நாளை இன்னும் சிறப்பானதாக மாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்பதை எங்கள் அனைத்து நேயர்களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.