எதிர்காலத்திற்க்கான வழியைச் சொல்லும் பிரண்டிக்ஸ்

“வைத்த இடத்திலிருந்து திருடர்களால் திருட முடியாதது
வெல்லத்தினாலும் அடித்து செல்லாதது
எவராலும் பரிதுக்கொள்ள முடியாதது
கற்ற கல்வியே எதிர்காலத்திலும் எம்மை காக்கும்”

நீங்கள் அனைவரும் கேட்ட இந்தக் கவிதையின் மூலம் கல்வியின் மதிப்பைப் புரிந்து கொள்ளுங்கள். இன்று சர்வதேச கல்வி தினம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று கொண்டாடப்படும் சர்வதேச கல்வி தினம், பிரண்டிக்ஸில் எங்களுக்கும் மிகவும் முக்கியமானது ஆகும். 2006 இல் தொடங்கப்பட்ட மனிதநேய திட்டத்தின் ஒரு அம்சம் கல்வி என்று அழைக்கப்படுகிறது. 2010 இல் ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான புலமைப்பரிசில் திட்டத்திற்கு பிறகு, கல்வியை ஊக்குவிக்கும் பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தினோம்.

2010ல், எங்கள் சொந்த குழந்தைகளுக்காக ஒரு புதிய வழியை வகுத்தோம் அமைத்தோம். மனிதாபிமான புலமைப்பரிசில் திட்டத்தில் மூலம் இதுவரை, பிராண்டிக்ஸ் உறுப்பினர்களின் 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர். 2012ல் தொடங்கப்பட்ட P.A.C.E. 4,000க்கும் மேற்பட்ட பிரண்டிக்ஸ் உறுப்பினர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். பிரண்டிக்ஸ் உறுப்பினர்களின் ஆளுமை மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்தி அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்கும் நோக்கத்துடன் இந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினோம்.

அதன்பிறகு, 2016ல் “மனிதபிமானத்தின் பரிசு” என்ற மற்றொரு புதிய வழியினையும் உருவாக்கினோம். முன்பள்ளி முதல் 13ம் வகுப்பு வரை கல்வி கற்கும் பிரண்டிக்ஸ் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு தேவையான பாடசாலை புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பிரண்டிக்ஸில், நாங்கள் வருடத்திற்கு 8,500 பாடசாலை பொருட்ள் கொண்ட பொதிகளை வழங்குகிறோம். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 37,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அத்துடன் இவ்வருடம் “மனிதபிமானத்தின் பரிசு” திட்டத்தின் கீழ் மேலும் சுமார் 16,000 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கியுள்ளோம்.

P.A.C.E. “மனிதபிமானத்தின் பரிசு” திட்டங்களுடன், இந்தியாவில் உள்ள பிரண்டிக்ஸ் நிறுவனமும் அதே திட்டங்களை நடத்தி வருகிறது. 2012 முதல் 2022 வரை, இந்தியாவில் செயற்படுத்தப்பட்ட “மனிதபிமானத்தின் பரிசு” திட்டத்தின் மூலம் 24,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.

2018 இல், நாங்கள் “ஷில்ப” எனும் திட்டத்தைத் தொடங்கினோம். பல்வேறு சிரமங்களினால் கல்வியை இடையிலேயே நிறுத்திவிட்ட பிரண்டிக்ஸ் உறுப்பினர்கள் மீண்டும் கல்வியைத் தொடரவும், இதன் மூலம் தொழில்முறைத் தகுதிகளை நிறைவு செய்து பட்டம் பெறவும் “ஷில்ப” திட்டம் உதவுகிறது. இத்திட்டத்தின் மூலம் 180க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மேலும், இதுவரை 390 விண்ணப்பதாரர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர். ஒரு மாதிரி திட்டமாக செயற்படுத்தப்படும் இந்த வழியில் செல்வதன் மூலம் எங்கள் சொந்த உறுப்பினர்களுக்கு தங்கள் வாழ்க்கையை முன்னேற்றிக்கொள்ள நாங்கள் கைகொடுத்து உதவுகிறோம்.

2021 இல், நாங்கள் மனிதாபிமான பல்கலைக்கழக உதவித்தொகை திட்டத்தைத் தொடங்கினோம், இது பல்கலைக்கழக உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு உலகை வெல்ல வழி காட்டுகிறது. கல்வி அமைச்சுடன் இணைந்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பிரண்டிக்ஸ் மாதிரி கிராமத் திட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வருகின்றோம். 2022 ஆம் ஆண்டில், 8 மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 18 குழந்தைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்க முடிந்தது.

நமது நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவிருக்கும் குழந்தைகளுக்கு கல்வியின் எல்லைகளைக் கடந்து ஒரு நட்சத்திரமாக எதிர்காலத்தை வெல்வதற்கான வழியை வழங்க பிரண்டிக்ஸ் நாம் தொடர்ந்து பணியாற்றுவோம்…