பசுமையுடன் நிலையான எதிர்காலத்திற்க்காக

பிரபஞ்சத்தின் அற்புதமான படைப்பான சுற்றுச்சூழல், உலகில் உள்ள அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகளின் தொகுப்பு ஆகும். இந்த சுற்றுச்சூழலும், அதில் உள்ள உயிரினங்களும் பாதுகாக்கப்பட்டால், சுற்றுச்சூழல் என்றென்றும் பாதுகாக்கப்புடன் இருக்கும். சுற்றுச்சூழலால் அதிகம் பயன்பெறும் மக்களாகிய நாம், நம் உயிர்போல் வாழ்நாள் முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான சர்வதேச சுற்றுச்சூழல் தினம் ‘பாலைவனமாவதைத் தடுத்து வளமான பூமியை மீட்டெடுப்பது’ என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகிறது. உலக மக்கள் அனைவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை  உணர்த்தும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறை உலக சுற்றுச்சூழல் தினத்தை அனுஷ்டிக்க ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்துள்ளது.

பூமியை எப்பொழுதும் அன்புடன் கவனித்துக்கொள்ளும் பிரண்டிக்ஸ் நாம், நீர், நிலம்  மற்றும் காற்று ஆகியவற்றின் நன்மைக்காக எங்களை அர்ப்பணித்துள்ளோம். அதற்காக நிகர பூஜ்ஜிய (Net Zero) செயற்திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழலுக்கு வெளியேற்றப்படும்  கார்பன் அளவினை பூஜ்ஜியமாக்கி, தண்ணீர் பயன்பாட்டை 25% குறைத்து, திடக்கழிவுகளை பூமியின் மீது விடாமல் சுற்றுச்சூழலை பராமரிப்பது பூமியின் மீது கொண்டுள்ள அன்பு காரணமாகவேயாகும். பசுமையான நிலையான எதிர்காலத்திற்காக பல்வேறு மரம் நடும் திட்டங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு போன்ற மாபெரும் திட்டங்களை செயற்படுத்த பிராண்டிக்ஸ் குழுமம்  மிக நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. எனவே, சுற்றுச்சூழலின் மதிப்பைப் புரிந்துகொண்டு, பூமியை பாதுகாக்க அன்புடன் கொண்டுவரும் எண்ணங்களைச் செயல்படுத்த பிரண்டிக்ஸ் நாம் உங்களை அன்புடன் வரவேட்கின்றோம். எமது உயிர்நாடியான சுற்றுச்சூழலின் நன்மைக்காக எதிர்காலத்திலும் செய்யக்கூடிய அனைத்து செயற்பாடுகளையும், பூமி மீது என்றும் அன்பு கொண்டுள்ள பிரண்டிக்ஸ் குழுமம் தொடர்ந்தும் பங்களிக்க தயாராக உள்ளது.