இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கை மிகவும் பாக்கியமானது. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மிருகமும் இந்த இயற்கையின் பிள்ளைகள் ஆவோம். ஆனால் இயற்கைக்கு எத்தனை பேர் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்? குடிப்பதற்கு சுத்தமான தண்ணீரைத் தேடி பல மைல்கள் தூரம் பயணிப்பவர்களையும், மரங்கள் இல்லாத பாலைவனம் போன்ற சூழலில் அவதிப்படுபவர்களையும், காற்று மாசுபாட்டால் சுத்தமாக சுவாசிக்கக் கூட முடியாத மக்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். உலகம் அனைத்து அம்சங்களிலும் வளர்ச்சியடைந்து வரும் வேளையில் பெரும்பாலான நேரங்களில் மக்கள் சுற்றுச்சூழலை மறந்து விடுகிறார்கள். இது அவர்களின் சொந்த வாழ்க்கையை மட்டுமல்ல, மற்றவர்களின் வாழ்க்கையையும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் விழுத்துகிறது. பிராண்டிக்ஸ் குழுமத்தின் உறுப்பினர்களாகிய நீங்கள் அந்த வகையில் சிறந்தவர்கள். நீங்கள் அனைவரும் சுற்றுச்சூழலுக்காக அர்ப்பணித்த பெருமைமிக்க குடும்பத்தின் அங்கத்தினர் ஆவீர்கள்.
2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்து பிராண்டிக்ஸ் தொழிற்சாலைகளையும் நிகர பூஜ்ஜிய கார்பன் (Net-Zero Carbon) நிலைக்கு கொண்டு வருவதே பிராண்டிக்ஸ் பசுமை நிலைத்தன்மை திட்டத்தின் குறிக்கோள்களில் ஒன்றாகும். விஞ்ஞான அடிப்படையிலான திட்டத்தின் மூலம் உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர பிராண்டிக்ஸ் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. லீட் பிளாட்டினம் சான்றிதழைப் பெற்ற உலகின் முதல் ஆடைத் தொழிற்சாலை என்னும் பெருமையை பிராண்டிக்ஸ் ஆகிய எம்மால் பெற முடிந்தது. மேலும், நமது மற்ற நிறுவனங்களும் சுற்றுச்சூழலுடன் இயைந்த பனியின் காரணமாக லீட் சான்றிதழ்களைப் பெற முடிந்தது.
பூமித்தாயின் மீது 100,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட எம்மால், தொழிற்சாலைகளுக்குத் தேவையான சக்தியின் 74% இனை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெறுவதற்கான வழிமுறைகளை செயற்படுத்த எம்மால் முடிந்தது. எமது நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் 44.8% நீர் மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் அல்லது மழைநீராகவே உள்ளது, 89.6% கழிவுகளை மறுசுழற்சி செய்யவும் அல்லது மீண்டும் பயன்படுத்தவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
2040 ஆம் ஆண்டளவில் அனைத்து கார்பன் உமிழ்வுகளையும் பூஜ்ஜியமாக்க கையொப்பமிட்ட முதல் இலங்கை நிறுவனமாகவும் பிராண்டிக்ஸ் வரலாறு படைக்கும். இயற்கை அன்னையின் குழந்தைகளாகிய நாம் இன்றைக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தி செயல்படுவோம்.