தொழில்நுட்ப அறிவுடன் உச்சம் தொட்டு தழைத்தோங்கும் பிரண்டிக்ஸ் பியகம நிறுவனம்

பிரண்டிக்ஸ் பியகம நிறுவனம், பியகம வணிக வலயத்தில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் குழுமத்தின் ஒரே மாதிரி அறைப் பிரிவாகும். வர்த்தக மண்டலத்தின் அனைத்து சட்டவிதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் மிகவும் வெற்றிகரமாக இயங்கும் இந்த பிரிவில் கிட்டத்தட்ட நானூறு பேர் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம் ‘ப்ரா’ (உள்ளாடை) பிரிவில் சிறப்பு வாய்ந்தது. மேலும், 3D வடிவமைப்பு ஒன்றினை, ஆடை மாதிரியாக  தயாரிக்கப்படும் ஒரே நிறுவனமும் இதுவாகும். நுகர்வோர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்களுக்கு உயர்வான சேவையை வழங்கும் நோக்கில், வத்துப்பிட்டிவளையில் இருந்து இந்த நிறுவனம் இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

2009 இல், பிரண்டிக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்தது. அச் சமயத்தில், இந்த நிறுவனத்தில் மாதிரிகள் மட்டுமே உருவாக்கப்பட்டன. ஆனால் அதன் பிறகு, நிறுவனத்தின் உயர் நிர்வாகத்தின் முடிவோடு புதிய தயாரிப்புகளின் அறிமுகப்படுத்துவது ஆரம்பமாகியது.அதன் பிறகு  அதற்கான மையம் தேவை என்றும் முடிவு செய்யப்பட்டது. எனவே, 2014 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் பிரண்டிக்ஸ் சொலுயுஷன் சென்டர் (பிரண்டிக்ஸ் தீர்வு மையமாக) பியகமவிற்கு கொண்டு வரப்பட்டது.

ஆரம்பத்தில், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் வெட்டு மற்றும் தையல் பிரிவில் மட்டுமே தயாரிக்கப்பட்டன. இப்போது, ​​நுகர்வோர்களின் தேவைகளின் அடிப்படையில், பிணைப்பு, புத்தாக்கம், பசை பிணைப்பு ஆகிய துறைகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் போட்டித்தன்மை வாய்ந்த சேவையை வழங்க எம்மால் முடிந்துள்ளது.

பிரண்டிக்ஸ் பியகம நிறுவனம் தனது தயாரிப்புகளின் தரம் மற்றும் அதன் ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. எனவே, வேலையைத் தாண்டி வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை அடையாளம் காண அவர்கள் நிறுவனம் மூலம் உதவி பெறுகிறார்கள். P.A.C.E, ஷில்ப போன்ற திட்டங்கள் மூலம் அவர்களின் வாழ்க்கையை சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

அத்துடன் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள், புலமைப்பரிசில்கள் போன்றவற்றை வழங்கி, கல்வி நிகழ்ச்சிகளையும் நடத்துவதன் மூலம்அவர்களுக்கும் உந்துகோலாக அமையும்  வகையில் பிரண்டிக்ஸ் பியகம நிறுவனம் செயற்பட்டு வருகின்றது. இந்த அனைத்து நடவடிக்கைகளுடன், ஊழியர்களின் குடும்பங்களின் நலன் மற்றும் செழிப்புக்காக பசுமை நிலைத்தன்மை மற்றும் மனுசத்கார போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.