மூன்றாவது விஷயத்தைப் பற்றி அவர் விரிவாகப் பேசினார், ” நாம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைச் செய்வதன் மூலமும், நமது அடிப்படைத் தேவைகளுக்கு முதலிடம் கொடுப்பதன் மூலமும் நமது மன ஆரோக்கியத்தைப் பலப்படுத்தலாம். அதாவது, நமது அடிப்படைத் தேவைகளான போதுமான தண்ணீர் குடிப்பது, சத்தான உணவு உண்பது, போதுமான தூக்கம் போன்றவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டும்.”
மேலும் அவரது கருத்துப்படி, நமது மன ஆரோக்கியத்தை வலுப்படுத்த நாம் முழுமைப்படுத்தவேண்டிய அடுத்த விஷயம், நமது தேவைகள் மற்றும் மதிப்புகள் என்ன என்பதை அடையாளம் கண்டு, அவற்றை எம்முடன் இருப்பவர்களுக்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் முழுமைப்படுத்துவதன் மூலம், நமது உள ஆரோக்கியத்தை மிகச் சிறந்த அளவில் பராமரிக்க முடியும். இது நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.