பிரண்டிக்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. அஷ்ரொப் ஒமார் அவர்களின் புதுவருட வாழ்த்துச் செய்தி

முதற்கண்  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மலர்ந்த இப் புத்தாண்டு சிறந்த ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.

நாம் இதுவரை வந்துள்ள அமைத்து அசைக்க முடியாத சாதனைகள் மூலம்  ஆற்றலையும் வலிமையையும் மலரும் புத்தாண்டிற்க்காக மீட்டிப்பார்க்க வேண்டிய ஒரு தருணம். கடந்த காலம், புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒரு பொதுவான இலக்கை நோக்கி நகரும் திறனை நமக்குக் காட்டித் தந்துள்ளது.

2023 உலகப் பொருளாதாரச் சரிவின் காரணமாக, விற்பனையில் குறைந்த வளர்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இருப்பினும், அதன் காரணமாக, புத்தாக்கங்களை உருவாக்கவும் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படவும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

2024 ஆம் ஆண்டின் ஆரம்பமானது , கடந்த காலத்திலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களுடன் தொடர்ந்து மாறிவரும் உலகத்துடன் ஒன்றிணைந்து எதிர்காலத்தை எதிர்கொள்ள நாம் தீர்மானிக்க வேண்டிய சந்தர்ப்பமாகும். எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நமது தீராத ஆசை எப்போதும் நம்மை வழிநடத்துகிறது. அதற்கமைய நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

ஒரு குழுவாக நாங்கள் எமது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • புதிய வாடிக்கையாளர் சார்ந்த வணிக உத்தியை நாம் அறிமுகப்படுத்தினோம். அதன் மூலம், வாடிக்கையாளர்களின் திருப்தி, தயாரிப்பு வகைகளில் முன்னுரிமையளித்தல் மற்றும் செயல்பாடுகளில் சிறந்து விளங்குவதை எங்களால் அடைய முடிந்தது.
  • One Brandix கருப்பொருளின் கீழ் கிளஸ்டர் மட்டத்தில் தனித்தனியாக இருந்த அனைத்து பிரண்டிக்ஸ் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து புதிய நிறுவன கட்டமைப்பை உருவாக்கினோம். இது நமது நெகிழ்வுத்தன்மை, புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது.
  • Smater brandix எனப்படும் எமது டிஜிட்டல் பயணத்தின் முன்னோடியாக விளங்கிய கட்டுநாயக்க பிரண்டிக்ஸ் தொழிற்சாலை தற்போது மிகவும் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதுபோன்ற 4 ஸ்மார்ட் தொழிற்சாலைகளை இந்த ஆண்டு நாம் அறிமுகப்படுத்த உள்ளோம்.
  • எங்களது பசுமை நிலைத்தன்மை பயணத்தின் வெற்றியை வெளிப்படுத்தும் வகையில், 6 பிரண்டிக்ஸ் தொழிற்சாலைகளுக்கு கடந்த ஆண்டு “நெட் ஜீரோ கார்பன்” (நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு) சான்றிதழைப் பெற முடிந்தது, இது குறைந்த கார்பன் உமிழ்வுத் தடம் கொண்ட தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் சான்றிதழாகும். 2030 ஆம் ஆண்டளவில், உலகளவில் அமைந்துள்ள எமது அனைத்து பிரண்டிக்ஸ் தொழிற்சாலைகளையும் “நெட் ஜீரோ கார்பன்” (நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு) சான்றளிக்கப்பட்ட தொழிற்சாலைகளாக மாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.

இந்த விஷயங்களால், நான் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்ப் பார்க்கிறேன்.

கடினமான பணிகளை எளிதாக்குவதன் மூலம் சிறந்து விளங்குவதே எங்கள் குறிக்கோள். அதன் மூலம் விழித்தெழுந்த தீர்வுகளை வழங்குவதும் ஆகும். நீங்கள் எந்த பணியில் ஈடுபட்டிருந்தாலும், அதன் மூலம் பிரண்டிகஸினை பலப்படுத்துவது உறுப்பினர்களாகிய நீங்களே.

“பார்முலா வன்” கார் பந்தயத்தைப் பற்றி ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்.அந்தப் பந்தயத்தில் முக்கியமானவர் காரை ஓட்டும் சாரதியே, இருப்பினும் அவரது வெற்றி தீர்மானிக்கப்படுவது அவர்க்கு உதவும் புத்திசாலித்தனமான குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனைப் பொறுத்து ஆகும். இந்த போட்டியின் வெற்றிக்கு இந்த குழுவின் ஒவ்வொரு உறுப்பினர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பிரண்டிக்ஸில் உள்ள தையல் நிபுணர்கள்  “பார்முலா வன்” சாரதிகளை போன்றவர்கள். அவர்கள் பிரண்டிக்ஸ் உற்பத்தி செயல்முறையின் இதயம் போன்றவர்கள்.

ஒரு “பார்முலா வன்”  சாரதிக்கு, நன்கு ட்யூன் செய்யப்பட்ட காரைத் தடையின்றி வெற்றிப் பாதைக்கு ஓட்டுவதற்குத் தனது குழுவின் ஆதரவு தேவை, நமது தையல் நிபுணர்களின்  வெற்றி, தையல் இயந்திரங்கள் சிறந்த நிலையில் இருப்பதை உறுதிசெய்யும் மெக்கானிக்கள், அதிக செயல்திறனுக்காகப் புத்தாக்கங்களை செய்யும் பொறியியலாளர்கள், சரியான நேரத்தில் மூலப்பொருட்களை சப்ளை செய்யும் ஆடை வெட்டும் பிரிவு, சரியான நேரத்தில் வேலையை சீராக செய்யும் திட்டமிடுபவர்கள் மற்றும் சரியான தொகையில் ஆர்டர்களைப் பெறும் விற்பனையாளர்கள், மனித வளப் பிரிவு மற்றும் நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள அனைவரின் ஆதரவையும் சார்ந்துள்ளது.

இப்படிச் சிந்திக்கும்போது, ​”நமது போட்டியில்” வெற்றிபெற, வெவ்வேறு பணிகளைச் செய்யும் ஒவ்வொருவரின் ஆதரவும் இன்றியமையாதது என்பது நமக்குத் தெளிவாகிறது. நெகிழ்வுத்தன்மை, புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மையுடன் கூடிய சிறந்த உற்பத்தி மூலம் உலகளாவிய ஆடைத் துறையில் பிரண்டிக்ஸை நிகரற்ற சக்தியாக மாற்றுவதற்கு காரணமாக அமைவது இந்த ஒத்துழைப்பே ஆகும்.

பிரண்டிக்ஸ் மதிப்புகளை மனதில் கொண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதிய வழிகளைத் தேடும் நமக்கு 2024 நல்ல நோக்குடன் கூடிய ஸ்மார்ட் பயணம்” என்று சிறப்பான ஆண்டாக அமையும் என்பதே எனது உணர்வாகும்.

மீண்டும் ஒருமுறை, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், பிற ஆதரவு சேவைகளை வழங்கும் அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் மலர்ந்த 2024 புத்தாண்டு மகிழ்ச்சியான மற்றும் அமைதியான புத்தாண்டாக அமைய பிரார்த்திக்கிறேன்.

அஷ்ரொப் ஒமார்
பிரண்டிக்ஸ் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி