P.A.C.E என்பது பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் உறுப்பினர்களின் தனிப்பட்ட மேம்பாடு மற்றும் தொழில்முறை மட்டத்தை மேம்படுத்துவதற்காக 2012 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இயங்கி வரும் ஒரு செயற்திட்டமாகும். எனவே P.A.C.E செயற்திட்டத்தின் கீழ் சுமார் 10,000 உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 6,000க்கும் மேற்பட்டவர்களுக்கு P.A.C.E மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எனவே, பிரண்டிக்ஸ் மூலம் நாம் இந்த உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளித்த ஊழியர்களை அவர்கள் சான்றிதழ் பெறும் வரை மதிப்பீடு செய்து, சான்றிதழ்களைப் பெறுவதற்கு அவர்களின் அறிவை வழங்கிய அதிகாரிகளை கெளரவிக்கை முடிவு செய்தோம். ஏறக்குறைய 140 பயிற்சியாளர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பைப் பாராட்ட நாங்கள் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்தோம். கொழும்பு கலதாரி ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த கெளரவிப்பு நிகழ்வு, அவர்களின் அறிவை மேலும் பகிர்ந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை.