சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் முன்னேறி வரும் பிரண்டிக்ஸ் குடும்பத்தின் மற்றொரு நிறுவனத்தின் கதை தொடர்பாக இம்முறை “வியமன்” TV யின் “நிறுவனத்தின் கதை” நிகழ்ச்சியின் மூலம் உங்களுக்கு கொண்டுவருகிறோம்.
சுற்றுச்சூழலுக்கு உகந்ததன்மை காரணமாக தங்க விருத்தினால் மகுடம் சூட்டப்பட்ட பிரண்டிக்ஸ் Essentials இரத்மலானை நிறுவனத்தை நாம் இம்முறை தெரிவு செய்தோம்.
இந்த நிறுவனம் 2005 ஆம் ஆண்டு பிரண்டிக்ஸ் Active Wear என ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பிரண்டிக்ஸ் Essentials என பெயர் மாற்றப்பட்டது.
பிரண்டிக்ஸ் Essentials இரத்மலானை நிறுவனம் தான் பிரண்டிக்ஸ் Essentials குழுமத்தின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.
பிரண்டிக்ஸ் Essentials இரத்மலானை நிறுவனம் பல விசேட சாதனைகளை அடைந்து பிரண்டிக்ஸ் குழுமத்தின் பெருமையை உயர்த்திய ஒரு நிறுவனமாகும். 2009 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் லீட் தங்க விருதை வென்றது. பிராண்டிக்ஸ் இரத்மலானை, அமெரிக்க பசுமைக் கட்டிட சபையின் பசுமை மதிப்பீட்டு அமைப்பிலிருந்து லீட் தங்க விருதைப் பெற்ற இலங்கையின் முதலாவது வர்த்தகக் கட்டிடமாகும். சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அதன் மதிப்புமிக்க பணிக்காக இந்த நிறுவனம் அத்தகைய மதிப்பைப் பெற்றது.
இந்த நிறுவனத்தை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் நிறுவனம் என்று அழைக்கலாம். இந்த நிறுவனம் பிராண்டிக்ஸ் குழுமத்தின் இந்த ஆண்டு இலக்கான பூஜ்ஜிய கார்பன் உமிழ்வுக்கான இலக்கை அடைய தன்னை அர்ப்பணித்து செயல்பட்டு வருகிறது.
பொதுவாக, இந்த நிறுவனத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் நடைபெறுவதில்லை. ஆனால் கொள்வனவாளர்களுக்கு ஆர்டர்களைப் பெறுவதற்குத் தேவையான மாதிரிகள் தயாரிக்கப்படுவது இந்த நிறுவனத்தில்தான். பிரண்டிக்ஸ் Essentials இரத்மலானை நிறுவனத்தில் சுமார் 200 உறுப்பினர்கள் பணிபுரிகின்றனர்.
அழகான நாளைக்காக சுற்றுச்சூழலைப் பாதிக்காத பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரண்டிக்ஸ் Essentials இரத்மலானை நிறுவனம் நாளுக்கு நாள் முன்னேற வேண்டும் என்பதே ” வியமன்” எமது பிரார்த்தனை ஆகும்!