ஒவ்வொரு மாதமும் பல பிரண்டிக்ஸ் தொழிற்சலைகள் இணைந்து ஏற்பாடு செய்யும் இரத்த தான நிகழ்வு கடந்த செப்டெம்பர் மாதமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக வத்துபிட்டிவல, அவிஸ்சாவளை, மினுவங்கொடை, ரிதிகம, பொலன்னறுவை, ரிதிகம பினிஷிங் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பிரண்டிக்ஸ் நிறுவனங்களும் பங்களித்தன.
கடந்த செப்டெம்பர் மாதம் 15 மற்றும் 22 ஆம் திகதிகளில் பிரண்டிக்ஸ் வத்துபிட்டிவல கிளைகளிலும், 08 மற்றும் 13 ம் திகதிகளில் பிரண்டிக்ஸ் அவிஸ்சாவளை கிளையிலும், 12 ம் திகதி பிரண்டிக்ஸ் மினுவங்கொடை கிளையிலும், 13 ஆம் திகதி பிரண்டிக்ஸ் ரிதிகம கிளையிலும், 21 ம் திகதி பிரண்டிக்ஸ் பொலன்னறுவை மற்றும் ரிதிகம பினிஷிங் நிறுவனங்களில் இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிரண்டிக்ஸ் குழுமம் பல வருடங்களாக இலங்கையின் மிகப்பெரும் கூட்டாண்மை நிறுவன இரத்த தானம் செய்பவராக தேசிய இரத்தமாற்ற நிலையத்தினால் கெளரவிக்கப்பட்டுள்ளது.
இதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், செப்டம்பர் மாதம் பிரண்டிக்ஸ் இரத்த தானம் திட்டத்தின் மூலம் தேசிய இரத்த மாற்று மையத்திற்கு கொடையாக வழங்கப்பட்ட இரத்தத்தின் அளவு 1059 பைண்டுகள் ஆகும்.
2022 ஆம் ஆண்டில் மட்டும், பிரண்டிக்ஸ் நிறுவன உறுப்பினர்களால் தேசிய இரத்த மாற்று மையத்திற்கு தானமாக வழங்கப்பட்ட இரத்தத்தின் அளவு 5700 பைண்டுகளுக்கு மேல் உள்ளது. 2011 முதல், பிரண்டிக்ஸ் குழுமம் 42,000 பைண்டுகளுக்கு மேல் இரத்தத்தை தேசிய இரத்த மாற்று மையத்திற்கு தானம் செய்துள்ளது. இரத்த தானம் செய்யும் ஒவ்வொரு நூறு இலங்கையர்களில் ஒருவர் பிரண்டிக்ஸ் குழுமத்தில் உறுப்பினராக இருப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்த விடயம் ஆகும்.
இவ்வாறான இரத்த தான நற்பணி நிகழ்ச்சிகளை மிக நீண்ட காலத்திற்கு வெற்றிகரமாக செய்வதற்கான வெற்றியின் இரகசியமானது எமது பிரண்டிக்ஸ் உறுப்பினர்களின் அதிக ஆர்வமும் அவர்களின் பெறுமதியான பங்களிப்புமே என்பதை நினைவில் கொள்ள வேண்டிய விடயம் ஆகும்.