சன்னதியின் முன் கோபுரம் அதன் கம்பீர தோற்றத்தை மேலும் அதிகரிக்கிறது. தேவாலயத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளி சிலுவை இருபத்தி நான்கு அடி உயரம் கொண்டது. பசிலிக்கா தேவாலயத்திற்கு அருகில் கட்டப்பட்ட லூர்து குகை, பசிலிக்கா தேவாலயத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த படைப்புகளில் ஒன்று என்று அழைக்கலாம். பசிலிக்கா தேவாலய பலிபீடத்தின் பின்புறம் இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது. கீழ் தளம் நற்கருணை ஆராதனைக்காக பயன்படுத்தப்படுகிறது.இந்த புனித ஸ்தலத்தை கட்ட முன்னோடியாக இருந்த தந்தை பெஞ்சமின் அவர்களின் உடல் இந்த தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதும் ஒரு சிறப்பு அம்சமாகும்.
இந்த தேவாலயத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் குடிப்பதால் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது மற்றும் நாட்டின் கிறிஸ்தவ வரலாற்றை பராமரிக்க பங்களித்த மரியாதைக்குரிய பாதிரியார்கள் பயன்படுத்திய பொருட்கள் தேவாலயத்திற்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் உள்ளன.
இத்தகைய தனித்துவமான மத மற்றும் வரலாற்று மதிப்பைக் கொண்ட தேவத்த பசிலிக்கா தேவாலயத்தை இன, மத வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் வழிபட்டு வருகின்றனர்.