"வாழ்க்கைக்கு ஒரு நல்ல அடித்தளம் இருப்பது முக்கியம்"

எத்தனையோ கனவுகளுடன் கட்டப்படும் வீட்டிற்கு உறுதியான அஸ்திவாரம் போடுவது போல் நம் வாழ்க்கைக்கும் ஒரு உறுதியான அடித்தளம் அமைத்துக்கொள்வது முக்கியமாகும். வலுவான அஸ்திவாரத்தில் தனது வாழ்க்கையை அமைத்து, சரியான முடிவுகளின் மூலம் வெற்றி பெற்ற ஒரு கதாபாத்திரம்தான் இன்று வியமன் தொலைக்காட்சியின் ‘ஹந்துநாகத்தொத் ஒபா மா’/”நீங்கள் என்னை அறிந்துகொண்டால்”  நிகழ்ச்சியின் மூலம் உங்களுக்கு கொண்டுவருகிறோம். அது பிராண்டிக்ஸ் வெலிசரவின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு.ரவின் ஜயசுந்த அவர்கள் ஆவார்.

“நான் எப்போதும் என்னைப் போலவே என்னை பார்க்க விரும்புகிறேன். நான் எப்போதும் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். நாம் எவ்வளவு எளிமையாக இருக்கிறோமோ, அவ்வளவு எளிதாக இந்த சமுதாயத்தில் நாம் மகிழ்ச்சியாக வாழ எம்மால் முடியும்.

நான் பார்க்கும் இன்னொரு விசேஷம் என்னவென்றால், நாம் செய்யும் எல்லாவற்றிலும் ஒரு நல்ல அடித்தளத்தை அமைப்பது மிகவும் முக்கியம் ஆகும். என் வாழ்க்கையில், நான் ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்து வேலையைத் தொடர ஒவ்வொரு முறையும் முயற்சித்தேன், முயற்சிக்கிறேன், தொடர்ந்து முயற்சிப்பேன். நான் படிப்பை முடித்து முதல் வேலை கிடைத்தபோது, ​​நான் ஒரே துறையில் வேலை பார்த்ததில்லை. நான் எப்பொழுதும் ஒரு துறையிலிருந்து மற்றோரு துறைக்கு மாறி வேலை செய்தேன், அந்தந்த துறையினை பற்றி படித்து, ஒவ்வொரு துறையில் உள்ள வேலையையும் பற்றி நல்ல அறிவைப் பெற முயற்சித்தேன். இந்த நவீன சமுதாயத்தில் பலருக்கு அப்படி துறைக்கு துறை செல்வது பிடிக்காது. ஏனென்றால், பெரும்பாலும் அறிவின் அடிப்படையில் அல்லாமல் அடித்தளம் அமைக்க முயல்கிறார்கள், அவர்களுக்குக் கிடைக்கும் மற்ற விஷயங்கள் அவர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் என அஸ்திவாரம் போட முயல்கிறார்கள்.

வாழ்க்கையில், பல்வேறு சமயங்களில் முடிவெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. அந்த நேரத்தில் நாம் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால் நான் எப்போதும் சொல்வது என்னவென்றால், நீங்கள் ஒரு முடிவை எடுத்தால், அது சரியான முடிவு என்று நினைத்து அதில் முன்னேற வேண்டும். நாங்கள் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்றால், அதற்காக நாங்கள் வருந்த வேண்டியிருக்கும்” என்றார்.