சூழலின் இதயத் துடிப்பிற்கு செவிமடுப்போம்

இயற்கைக்கும் மனிதனுக்கும் பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. மனிதர்கள் உட்பட அனைத்து விலங்குகளும் தங்கள் வாழ்விடங்கள், உணவு மற்றும் அனைத்தையும் இயற்கையிலிருந்து பெற்றுக்கொள்கின்றன. ஆனால், உலக சுற்றுச்சூழல் தினமான இன்று இயற்கைக்காக நாம் என்ன கொடுக்கிறோம் என்று சிந்திக்க விடப்பட்டுள்ளோம்.

இன்று உலகம் பல சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து வருகிறது. சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக், பொலித்தீன் சேர்க்கப்படுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அவை சிதைவதற்கு நீண்ட காலம் எடுக்கும், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதம் மிகப்பெரியது. மேலும், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஆறுகள் போன்ற நீர் மூலங்களில் சேருவதால் நீர் மாசுபடுகிறது, அதேபோல தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் தீங்கு விளைவிக்கும் புகையால் காற்று மாசுபடுகிறது என்று உங்களுக்குத் தெரியும். இது போன்ற பிரச்சனைகளால், சுற்றுச்சூழல் மாசுபடுதல் அதிகரித்து விட்டாலும், தனிநபர்களாகிய எம் ஒவ்வொருவருக்கும் சுற்றுச்சூழலுக்கு ஏதாவது செய்ய முடியும்.

பிரண்டிக்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் எமக்கு, நாளைய சுற்றுச்சூழலுக்கு பிரண்டிக்ஸ் எவ்வளவு பங்களிக்கிறது என்பது

எங்களுக்கு தெரியும். மரங்கள் நடும் திட்டங்கள், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு திட்டங்கள், புதுப்பிக்கத்தக்க சக்தியை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதில் பங்களிப்பது போன்ற சுற்றுச்சூழலுக்கான சிறந்த பணியை பிரண்டிக்ஸ் குழுமம் பல ஆண்டுகளாக செய்து வருகிறது. பசுமை நிலைப் பேராண்மை  திட்டங்கள் மூலம் சுற்றுச்சூழலின் இதயத் துடிப்பை தாளமாகப் பராமரிக்க பிரண்டிக்ஸ் பங்களிக்கிறது, மேலும் பிரண்டிக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த நீங்களும் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற சிறந்த அளவில் பங்களிக்கிறீர்கள். இவ் உலகை நமக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஆரோக்கியமான இடமாக மாற்றுவோம்.