“வெற்றி என்பது நீங்கள் எவ்வளவு பணம் சம்பாத்தித்துள்ளீர்கள் என்பது மட்டும் அல்ல. “வெற்றி என்பது மக்களின் வாழ்க்கையில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள் என்பதாகும்” என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி திருமதி மிஷல் ஒபாமா ஒருமுறை கூறினார். பிரண்டிக்ஸ் குழுமத்தில் உயர் பதவியில் இருக்கும் பெண்ணாக பல்வேறு திட்டங்களின் மூலம் பலரது வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திய பிரண்டிக்ஸ் குழுமத்தின் செயற்திட்டப்பணிப்பாளர் திருமதி நதாஷா பொரலஸ்ஸ இம்முறை “ஹந்துநாகத்தோத் ஒப மா” / நீங்கள் என்னை அறிந்துக்கொண்டாள் என்ற நிகழ்ச்சியின் ஊடாக வியமன் டிவியில் உங்களை சந்திக்க வருகிறார்.
“நான் பிரண்டிக்ஸ் இயக்குநர்கள் குழுவில் நதாஷா பொரலஸ்ஸ ஆவதற்கு முன்பு எனக்கு நீண்ட பயணம் இருந்தது. நான் ஒரு மூத்த மகள், ஒரு சகோதரி, ஒரு மனைவி, ஒரு தாய், நான் ஒரு சாதாரண பெண். இயக்குநர் குழுவில் உள்ள ஒரே பெண் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
முதலாவதாக, இத்தகைய சூழ்நிலைக்கு வந்ததற்கு முதலில் என் அம்மாவை நினைவூட்ட விரும்புகிறேன். ‘என்னால் எதையும் செய்ய முடியும்’ என்பதை மிகச்சிறு வயதிலேயே நான் ஒரு சிறுமியாக இருக்கும் பொழுதே காட்டித்தந்தவர் என் அம்மா. நான் உண்மையில் என்னை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, பிரண்டிக்ஸ் குழுமத்தில் உள்ள அனைத்து பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். அதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
நான் சுமார் 27 வருடங்களாக ஆடைத் தொழில் துறையில் பணியாற்றி வருகிறேன். நான் என் குடும்பப் பொறுப்பு, அலுவலகப் பொறுப்புகளை எப்பொழுதும் விட்டுக் கொடுத்ததில்லை. தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் சரியாக சமநிலைப்படுத்துங்கள். ஒரு கட்டத்தில் நாம் ஒரு தேர்வு செய்ய வேண்டும் என்று எத் தருணத்திலும் நினைக்க வேண்டாம். இரு தரப்பையும் சமன் செய்து வந்தால் வெற்றி பெறலாம்.
சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவது எனக்கு மிகவும் பிடித்தது. வரைதல் மட்டுமல்ல, என் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், அந்த படைப்பாற்றலை வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் கொண்டு வருவது எப்படி என்று நான் பார்க்கிறேன். ஏனென்றால், நாம் பிறக்கும்போதே, வாழ்வில் ஏதோ ஒரு நாட்டம் இருக்கும். எனது ஆர்வம் இந்த படைப்பாற்றல். நம்மால் முடிந்த போதெல்லாம், அந்த ஆர்வத்தை மற்றவர்களுடன் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதைப் பார்க்க வேண்டும்.