பதினைந்து ஆண்டுகளாக தேசிய இரத்த மாற்று மையத்திற்கு தொடர்ந்து இரத்த தானம் செய்து பல இதயங்களுக்கு உயிர் கொடுத்த பிரண்டிக்ஸ் நிறுவனம், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் அந்தப் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது.
ரத்மலானை, ரம்புக்கனை மற்றும் மீரிகம 02 ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பிரண்டிக்ஸ் கிளைகளிலிருந்தும் மொத்தமாக 318 பைண்டுகள் இரத்தம் இந்த மாதம் தேசிய இரத்த மாற்று நிலையத்திற்கு தானமாக வழங்கப்பட்டது.
மீரிகம 02 நிறுவனத்தில் இடம்பெற்ற இரத்ததானத்தின் போது மற்றுமொரு விசேட நிகழ்வு இடம்பெற்றது. அதாவது, உறுப்பினர்களுக்கு ஒரு நினைவு புத்தகத்தை உருவாக்குதல். மேலும், இரத்த தானத்தில் பங்கேற்றதனை உறுதி செய்வதற்காக கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
பிரண்டிக்ஸ் குழுமம் பல வருடங்களாக இலங்கையின் மிகப்பெரும் கூட்டு இரத்த தானம் செய்பவராக தேசிய இரத்தமாற்ற நிலையத்தினால் மதிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் மட்டும், பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் உறுப்பினர்களால் தேசிய அளவில் செலுத்தப்பட்ட இரத்தம் 5700 பைண்டுகளையும் தாண்டியது. 2011 முதல், பிரண்டிக்ஸ் குழுமம் 42,000 பைண்டுகளுக்கு மேல் இரத்த தானம் செய்துள்ளது. மேலும், இரத்த தானம் செய்யும் ஒவ்வொரு நூறு இலங்கையர்களில் ஒருவர் பிரண்டிக்ஸ் குழுமத்தில் உறுப்பினராக உள்ளார்.
இவ்வாறாக, ஆடைத்துறையில் மட்டுமன்றி சமூக நலச் செயற்பாடுகளிலும் தலைசிறந்த வர்த்தக நாமமாக பிரண்டிக்ஸ் குழுமம் உயரிய கௌரவத்தைப் பெற்று வருகின்றது. இந்த செயற்பாடுகளுக்கு, எமது உறுப்பினர்களின் உத்வேகமும், ஆர்வமும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.