பாதரசத்தினால் உருவாக்கப்பட்ட பிரண்டிக்ஸின் சின்னம்

“ரசதிய விழா” / “மேக்குரி விழா”  என்ற இரண்டு வார்த்தைகள் உங்கள் அனைவருக்கும் மிகவும் நெருக்கமான மற்றும் பழக்கமான வார்த்தைகள் ஆகும். இது இரண்டு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட

ஓர் உணர்வு ஆகும். பாதரசம் ஒரு சிறப்பு உலோகம். திரவமாக இருக்கும் ஒரே உலோகம் பாதரசம் மாத்திரமே. இப்போது நாம் ஏன் பாதரசத்தைப் பற்றி பேசுகிறோம் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். பிரண்டிக்ஸ் எங்கள் சின்னத்தை பாதரசத்திலிருந்து உருவாக்க்கப்பட்டுள்ளது. பிரண்டிக்ஸ் போலவே பாதரசமும் தனித்துவம் வாய்ந்தது என்பதால் லோகோவிற்கு பாதரசத்தைப் பயன்படுத்தி உள்ளோம்.

திரவமாக இருக்கும் ஒரே உலோகம், பாதரசம் மிகவும் நெகிழ்வான உலோகம். வெள்ளி நிறத்திலான பளபளப்பான இவ் உலோகத்தின் குணாதிசயங்கள் பிரண்டிக்ஸின் மதிப்புகள் மற்றும் பண்புகளுடன் நன்றாக ஒத்துப்போகின்றன. இந்த உலோகம் அதன் விதிவிலக்கான தழுவல் மற்றும் நெகிழ்வுத்தன்மை காரணமாக மிகவும் சிறப்பு வாய்ந்தது. மிகக் குறைந்த வெப்பநிலையில், பாதரசம் திடப்பொருளாகவும், அதிக வெப்பநிலையில் பாதரசம் வாயுவாகவும் மாறும். பிரண்டிக்ஸ், பாதரசத்தைப் போலவே, சிறப்பான குணங்கள் மற்றும் மதிப்புகளைக் கொண்ட ஒரு நாமம் ஆகும். எங்களுடைய தனித்துவத்தின் காரணமாக நுகர்வோர்களின் தேவைக்கேற்ப புதிய தயாரிப்புகளை உலகிற்கு வழங்க நாங்கள் எப்போதும் முயற்சி செய்கிறோம். அந்தத் தனித்துவத்தினால்தான் பிரண்டிக்ஸ் ஆடைத் துறையில் உலகிற்குத் தீர்வுகளை வழங்கி முன்னேறிச் செல்லும் நிறுவனம் என்ற பெயரைப் பெற்றுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்துடன் புதுப்பிக்கப்பட்ட பிரண்டிக்ஸ் சின்னத்தால் குறிப்பிடப்படும் மதிப்புகள் பற்றிய கதை எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை விரைவில் உங்களுக்குச் சொல்வோம். எனவே, அந்தக் கதையை பற்றி அறிய எங்களுடன் தொடர்ந்தும் இணைந்து  இருங்கள்.