சிங்கள இலக்கியத்தின் விளைச்சலை அறுவடைசெய்ய பிரண்டிக்ஸின் மலரும் இலக்கியவாதிகள்

“நான் புத்தகம் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் அல்ல, சிறுவயதில் இருந்தே எனக்கு முறைசாரா எழுத்துப் பழக்கம் இருந்தது. ஆசிரியர்கள் இதனை கண்டறிந்து, நீங்கள் எழுத்தாளர் ஆவதற்கான தகுதி உடையவர் என்று ஊக்கப்படுத்தினார்கள். என்னுள் இருந்த என்னைக் கண்டுபிடிக்க உதவினார்கள்.”

“அபிரஹாஸ் குருளு கந்தே விக்கிரமய”/ “மர்மப் பறவை மலையின் சாகசம்”  என்ற சிறுவர் கதை நூலை எழுதிய அவர், பிரண்டிக்ஸ் நிவித்திகல கிளையைச் சேர்ந்த திவங்க எஸ். திசாநாயக்க ஆவார். அவர் சிங்கள இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு வளரும் எழுத்தாளர், சிங்கள இலக்கியத்தில் பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் பெருமைமிக்க பிரதிநிதி.

மேலும் அவர் எழுத்தாளர் மட்டுமல்ல, கவிஞரும் கூட. மேலும் தனது படைப்புக்களை வெளியீடுவது குறித்தும் நம்மிடம் கருத்து தெரிவித்தார்.

“விஜய மங் குவேணி”  என்று எனது கவிதைப் புத்தகத்திற்குப் பெயரிட்டுள்ளேன், அந்தப் புத்தகத்துடனும், “அபிரஹாஸ் குருளு கந்தே விக்கிரமய” என்ற இளம் நாவலுடனும் விரைவில் வாசகர்களைச் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்.”

திவங்கவைப் போலவே, சிங்கள இலக்கியத்தில் பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் பெருமைக்குரிய பிரதிநிதியான நிஷி அல்லது நீஷா மதுரங்கியும் ஒரு வளரும் இளம் கவிஞர். ஒரு கவிஞராக சமூகத்தில் நுழைவதற்கு பிரண்டிக்ஸ் வழங்கிய ஆதரவைப் பற்றி அவர் எங்களுடன் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“பிரண்டிக்ஸ் வியமன் மூலம் கவிதைகளை போட்டிகளுக்கு எனது கவிதையினையும் சமர்பித்தேன். பின்னர் எனது கவிதையும் முதல் பத்து கவிதைகளுக்குள் தேர்வாகியிருந்தது.அந்த பத்து கவிதை படைப்புகளில் எனது கவிதையும் தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.அதிலும் எனக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் உள்ள அனைவரும் பல படைப்புகளை  உருவாக்க என்னை ஊக்குவிக்கிறார்கள்.

எனவே பிரண்டிக்ஸ் ஆகிய நாம், இந்த இலக்கிய மாதத்தில் இலக்கியத் திறன்கள் நிரம்பிய எங்களின் திறனாளிகளின் குரல்களை உலகுக்குக் கொண்டு வர நாங்கள் இவ்வாறு பங்களிக்கிறோம்.