சுவையான நிறைவான டோஸ் சாலட் செய்வது இப்படித்தான்!

உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது என்பதை கற்பிப்பதற்காக அவர் இன்று பிரண்டிக்ஸ் வியமன் TV உடன் இணைகிறார். அவர் யார்? அவர் தான் நீங்கள் அனைவரும் நன்கு அறிந்த செஃப் லாயிட்.

எந்நாளும் சத்தான உணவுகளை எவ்வாறு தயாரிப்பது என்பதைப் பற்றி அவர் முதலில் விவரித்தார். ‘ பட்டாணி,கௌபி  போன்ற தானியங்கள் காலை உணவுக்கு மிகவும் ஏற்றது. நார்ச்சத்து நிறைந்த உணவை காலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது, எனவே நீங்கள் அத்தகைய உணவு வேலை ஒன்றை தயார் செய்வது நல்லது. மதிய உணவிற்கு சிவப்பு சாதத்துடன் பச்சை காய்கறி குழம்பும், இரவு உணவிற்கு விருப்பமான காய்கறிகளுடன் ரொட்டியும் தயார் செய்யலாம். மேலும் நார்ச்சத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.’

பிறகு, சுவையும் தரமும் நிறைந்த சாலட்டை எப்படி அற்புதமான முறையில் தயாரிப்பது என்று எமக்குக் காட்டினார்.

“டோஸ் சாலட் எப்படிச் செய்வது என்று நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன். பொதுவாக லெடூஸ் கீரையை வெட்ட மாட்டோம். நாங்கள் அவற்றை சிறிய துண்டுகளாக உடைக்கிறோம். இந்த சாலட்டில் நாம் விரும்பும் காய்கறி அல்லது பழங்களை சேர்க்கலாம். இந்த சாலட்டிற்கு, தக்காளியை சதுரங்களாகவும், வெங்காயத்தை வட்டமாகவும் வெட்டிக்கொள்ள வேண்டும். இந்த சாலட்டில் தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை வெள்ளரிகள் சேர்க்கிறோம். காரமாக வேண்டுமானால் கறி மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் உப்பு, மிளகு, ஆலிவ் எண்ணெய் சிறியலவு சேர்க்கவும். மேலும் சிறிது தேசிக்காய் சேர்க்கவும். இறுதியாக, இவை அனைத்தையும் ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு டோஸ் செய்ய வேண்டும்.’

மேலும், உணவு தயாரிக்க தேவையான உபகரணங்களை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை நம்முடன் பகிர்ந்து கொள்ளவும் அவர் மறக்கவில்லை.