இரத்மலானை பார்வையற்றோருக்கான கல்லூரிக்கு பிரண்டிக்ஸ் இடமிருந்து உதவி

கடந்த ஒக்டோபர் மாதம் பிரண்டிக்ஸ் நிறுவனம் இரத்மலானை பார்வையற்றோர் கல்லூரியின் கணினி ஆய்வுகூடத்தை மறுசீரமைப்பு செய்து அதற்கு தேவையான கணினி உபகரணங்களை வழங்கி வைத்தது. பார்வையற்ற கல்லூரி மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாக அமைந்திருந்தது. இந்த நன்கொடை மிகவும் நேர்த்தியான வைபவத்தில் அடையாளப்படுத்தப்பட்டதுடன், இந்நிகழ்வில் பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.ஒமர் சாதிக், டிஜிட்டல் விவகார இணைப்பாளர் திரு.ஓஷத சேனாநாயக்க, சமூக நலன்புரிப் பிரிவின் பிரதானி திருமதி. மாலிகா சமரவீர, மனிதவள பிரதி முகாமையாளர் திரு.  ஹர்ஷ லியனகே உற்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.