நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பிரண்டிக்ஸ் இரத்த தானம்

வருடம் முழுவதும் மாதாந்தம் நடத்தப்பட்டு வந்த பிரண்டிக்ஸ் இரத்த தானம் நிகழ்ச்சி கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நான்கு பிரண்டிக்ஸ் நிறுவனங்கள் இதற்கு தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தன.

நவம்பரில் பிரண்டிக்ஸ் இரத்த தானம் வழங்கும் திட்டத்தின் போது 126 பைன்ட் இரத்தமும், டிசம்பரில் பிரண்டிக்ஸ் இரத்த தானம் வழங்கும் திட்டத்தின் போது 157 பைன்ட் இரத்தமும் தேசிய இரத்த மாற்று மையத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

அதன்படி, பிரண்டிக்ஸ் குழுமத்தால் மொத்தம் 3192 பைன்ட் ரத்தம் தேசிய இரத்த மாற்று மையத்திற்கு வழங்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டில் மாத்திரம், பிரண்டிக்ஸ் உறுப்பினர்களினால் தேசிய இரத்த மாற்று மையத்திற்கு 5,700 பைண்டுகளுக்கு மேல் இரத்தத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர். 2011 முதல், பிரண்டிக்ஸ் குழுமம் 42,000 பைண்டுகளுக்கு மேல் இரத்தத்தை தேசிய இரத்த மாற்று மையத்திற்கு தானம் செய்துள்ளது. மேலும், இரத்த தானம் செய்யும் ஒவ்வொரு நூற்றுக்கணக்கான இலங்கையர்களில் ஒருவர் பிரண்டிக்ஸ் குழுமத்தில் உறுப்பினராக உள்ளார்.

பிரண்டிக்ஸ் குழுமமானது பல வருடங்களாக ஒவ்வொரு மாதமும் இவ்வாறான ஒரு முக்கியமான வேலைத்திட்டத்தையும் சமூக பணியையும் முன்னெடுத்து வருகின்றது, மேலும் பிரண்டிக்ஸ் குழுமமானது தேசிய இரத்த மாற்று நிலையத்தினால் பல வருடங்களாக இலங்கையின் மிகப்பெரும் கூட்டு இரத்த தானம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை பிரண்டிக்ஸ் உறுப்பினர்களின் பெருந்தன்மையை குறிக்கின்றது.