இன்று, பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் திரு.நதுன் பெர்னாண்டோ அவர்கள், வியமன் தொலைக்காட்சியின் “நீங்கள் என்னை அறிந்தால்”/ ‘ஹந்துனாகத்தொத் ஒப மா’ நிகழ்ச்சியின் மூலம் எங்களுடன் இணைகிறார். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நிறுவன ரீதியில் செய்யப்படும் விடயங்கள் போலவே நிறுவனத்தின் உறுப்பினர்கள் செய்யக்கூடிய விஷயங்கள் குறித்து அவரிடம் கலந்துரையாடினோம்.
இந்த கலந்துடையாடலின்போது பிரண்டிக்ஸ் குழுமத்தில் உள்ள நிறுவனங்களின் பிரதான நோக்கங்கள் குறித்து அவர் குறிப்பிட்டார். முதலாவதாக, On Time Delivery அப்படியென்றால், வாங்குபவர்களுக்கு உறுதியளித்தபடி, அதே நாளில், சரியான தரத்துடன் ஆடை தயாரிப்புகளை வழங்குவது நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றார். மேலும், நிறுவனத்தில் பணிபுரியும் உறுப்பினர்களுக்கு மிகச் சிறந்த மாதாந்திர வருமானத்தை வழங்குவது மற்றும் வாங்குபவர்களுக்கு ஏற்ற வாங்கக்கூடிய வகையில் குறைந்தபட்ச உற்பத்திச் செலவைப் பராமரிப்பது ஏனைய முக்கிய நோக்கங்களாகும் என்று அவர் குறிப்பிட்டார்.