ஒரு பெரிய அணையை கட்ட - ஒரு துளி நீரை கொடையளிப்போம்

“நீர்தான் உயிர்நாடி” என்று ஒரு முதுமொழி கேட்டிருப்பீர்கள். உண்மையிலேயே ஒரு உயிர் தண்ணீரால் தீர்மானிக்கப்படுகிறதா? இந்த கேள்விக்கான பதில் நிச்சயமாக ஆம் என்று தான் இருக்கும். குடிக்க ஒரு சொட்டு சுத்தமான தண்ணீர் கூட இல்லாத மிருகங்களும் மனிதர்களும் இந்த உலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நீங்கள் அறிவீர்களா? உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகில் உள்ள ஒவ்வொரு 3 பேரில் ஒருவருக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. இலங்கையில் இந்த நிலைமையை நாம் கருத்தில் கொண்டால், உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகளின்படி, 35.6% மக்கள் சுத்தமான மற்றும் பாதுகாப்பான தண்ணீரைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த அவல நிலையைப் புரிந்துகொண்டு இலங்கையின் பொது மக்களின் நீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் வழங்கும் வகையில், பிரண்டிக்ஸ்  குழுமம் பல வருடங்களாக பல அற்புதமான வேலைத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் பொது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வருகின்றது. உலகின் நீர் வளங்களின் மதிப்பைப் போற்றும் அந்த அற்புதமான மனிதாபிமானத் திட்டங்கள் குறித்து எடுத்துரைப்பதற்கு இவ்வாறு தயாராகிறது.

இலங்கையில் பிரண்டிக்ஸ் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள தண்ணீர் பிரச்சனையால் அவதிப்படும் பொது மக்களுக்கும், இலங்கையில் தண்ணீர் பிரச்சனை உள்ள மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் வழங்கும் திட்டங்கள் எம்மால் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. பிரண்டிக்ஸ் குழுமத்தால் 4300க்கும் மேற்பட்ட நீர் திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களால் சுமார் 30,000 பேர் பயனடைகின்றார்கள். இதில் மொத்தம் 17,000 குடும்பங்கள் உள்ளன. மேலும், பிரண்டிக்ஸ் எங்களால் உருவாக்கப்பட்ட 360க்கும் மேற்பட்ட மாதிரி கிராம திட்டங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைகிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த பெரும் எண்ணிக்கையிலான மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வது உண்மையில் எளிதான காரியம் அல்ல. ஒட்டுமொத்தமாக, 2024 ஆம் ஆண்டளவில், பிரண்டிக்ஸ் குழும வலையமைப்பு இலங்கை சமூகத்தின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நீர் திட்டங்கள் மற்றும் மாதிரிக் கிராமங்கள் போன்ற 4674 திட்டங்களை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு பொது மக்களின் வாழ்க்கையை நல்லதொரு இடத்திற்கு கொண்டு வந்து அவர்களின் வாழ்வை விழித்தெழ வைக்கும் பிரண்டிக்ஸ் “மனுசத்கார” / மனிதாபிமான வேலைத்திட்டங்களை இலங்கை மக்களுக்கு இன்னும் பல காலம் வழங்க வேண்டும் என்பதே பிரண்டிக்ஸ் எமது எதிர்பார்ப்பாகும்.