ESG என்றால் என்ன?

ESG என்பதன் சுருக்கமானது Environment (சுற்றுச்சூழல்), Social (சமூகம்) மற்றும் Governance (நிர்வாகம்) என்பனவற்றை குறிக்கிறது. ESG எனும் கருப்பொருளின் பிரகாரம், ஒரு குறிப்பிட்ட குறியீட்டைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த மூன்று பகுதிகளிலும் ஒரு நிறுவனம் எவ்வளவு வெற்றிகரமாக உள்ளது என்பதை அளவிட பயன்படுத்த முடியும்.

E இன் மூலம் நிறுவனத்தினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தின் அளவையும், S மூலம் நிறுவனத்தினால் சமூகத்தின் மீது ஏற்படுத்தப்படும் தாக்கத்தையும் மற்றும் Gயின் மூலம் நிறுவனத்தின் தலைமை மற்றும் நிர்வாகத்தையும் மதிப்பிடப்படுகிறது. இந்த மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு விளங்கும் நிறுவனங்களின் இருப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

பிரண்டிக்ஸில் நாம் எவ்வாறு ESGயினை தழுவி உள்ளோம்?

எமது அனைத்து பிரண்டிக்ஸ் நிறுவனங்களிலும் “சோலார் பேனல்” அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. மிக எளிதாகவும், ஆரம்ப செலவிற்குப் பின்னர் இலவசமாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ள இவற்றைப் பயன்படுத்தலாம்.

மேலும், பிரண்டிக்ஸ் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் அழுக்கு நீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்து மீண்டும் உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் படுகிறது. மழைநீரும் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

பிரண்டிக்ஸ் மாதிரி கிராமம் என்ற கருத்தின் கீழ், அந்த கிராமங்களுக்கு சுத்தமான தண்ணீரைப் பெற குழாய் நீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அது மாத்திரமன்றி பிரண்டிக்ஸ் “மனுசத்கார” மனிதாபிமான செயற்றிட்டத்தின் கீழ் எட்டு லட்சத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவர்களின் கல்விக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வாறுதான் பிரண்டிக்ஸில் நாங்கள் ESG குறியீட்டில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளோம்.