புத்தாண்டைக் கொண்டாடுவோம் - பண்பாடுகளை போற்றுவோம்

நாட்டில் வசந்த பருவகாலம் வரும் ஏப்ரல் மாதத்தில் மரம், செடி, கொடிகளிள் துளிர்விட்டு, சுவையான பழங்களும்,  பூக்களும் பூத்துக்குலுங்கும் காலமாகும். இம்முறை புத்தாண்டிற்காக அனைவரும் வீடுகளையும், தளபாடங்களையும் சுத்தம் செய்து, புது ஆடைகள் வாங்கி, புத்தாண்டிற்கு உரிய இனிப்பு வகைகளை தயாரித்து புது வருடத்தை கொண்டாட தயாரானோம். ஆனால் பிரண்டிக்ஸில் உள்ள எங்களுக்கு, இந்த புத்தாண்டு பழக்கவழக்கங்கள் புதிய விஷயங்கள் அல்ல. காரணம் என்னவென்றால், நாம் பிரண்டிக்ஸ் ஒழுக்க மதிப்புகளுடன் வாழுகின்றமையினால்.

புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டுகள் கூட நமக்கு மிகவும் நெருக்கமானவை. பிரண்டிக்ஸில் பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகளை நமது பணிச்சூழலில் நடைபெறும் செயல்கள் மூலம் காணலாம். பாரம்பரிய நாட்டுப்புற விளையாட்டுகளின் அடிப்படை நோக்கம் கூட்டாக செயல்படுதல், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு ஆகும். கயிறு இழுத்தல், பல்லாங்குழி விளையாடுதல், போர்த் தேங்காய் அடித்தல், கிளித்தட்டு, வழுக்கு மரம் ஏறுதல் போன்ற பாரம்பரிய கிராமிய விளையாட்டுகளின் மூலம் நாம் இதனைக் காணலாம். அதுமட்டுமல்லாமல் புண்ணிய காலம், கை விசேடம், வியாபாரம் மற்றும் புதுக்கணக்கு ஆரம்பித்தல் போன்ற சடங்கு சம்பிரதாயங்களைச் சரியாக செய்து புத்தாண்டின் பாக்கியமும், புத்தாண்டு பிறந்த மகிழ்ச்சியும் ஒருங்கே கொண்டாடி மகிழ்கின்றோம். நாம் பின்பற்றும் மதத்தின் ஆசீர்வாதங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இதையெல்லாம் செய்கிறோம். ஒரு மதம் அல்லது இனம் வளர்ச்சியடைவதற்கும் முன்னேறுவதற்கும், அந்த மதம் மற்றும் இனத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் அதற்காக நேர்மையாக செயல்படுதல் மிகவும் அவசியமானது. எனவே இந்த சிங்கள தமிழ் புத்தாண்டிலும் சடங்கு சம்பிரதாயங்களை சரியாக செய்து அதையே கடைபிடிக்கின்றோம். நாம் அனைவரும் பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் அவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி அதன்படி நடந்து கொண்டு புத்தாண்டில் வேலைகளை ஆரம்பிக்கின்றோம். அதுவே பல வருடங்களாக பின்பற்றப்பட்டு வரும் கலாச்சாரத்தின் சிறப்பும் ஆகும்.

புத்தாண்டில் பின்பற்றப்படும் சமய கொண்டாட்டங்கள் மற்றும் புத்தாண்டு பாரம்பரிய  விளையாட்டுகளில் உள்ள நோக்கம், எங்கள் பிரண்டிக்ஸ் மதிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது இரகசியமல்ல. எனவே இதன் மூலம் புதுவருடத்தில் நாம் பின்பற்றும் மரபு ரீதியான பழக்கவழக்கங்கள் நமக்குப் புதிதல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. எனவே, இந்த புத்தாண்டில் மதிப்புகளை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைவோம். உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!