அன்பின் வற்றாத ஆதாரமாகிய அம்மா

சூரிய ஒளியாலும் தாயின் ரத்தத்தாலும் உலகம் உயிர்ப்புடன் இருக்கிறது. உண்மையிலேயே, ஒரு உயிரைப் பெற்றெடுக்கவும், அவனை வளர்த்து பெரியவனாக்குவதற்கு ஈடுபடும் செயலில், ஒரு தாயின் தியாகம் அளவிட முடியாதது. அந்த தியாகத்தை உலகில் வேறு யாராலும் செய்ய முடியாது, வேறு யாரும் செய்யவும் மாட்டார்கள். பத்து மாதம் தன் கருவில் சுமந்து பெற்றெடுக்கும்  குழந்தைக்கு ரத்தத்தை பாலாக மாற்றி  உணவளிக்கும் தாய், தன் முழு வாழ்க்கையையும் தன் குழந்தைக்காக அர்ப்பணிக்கிறாள். இந்த தியாகங்கள் அனைத்தும் தாய்மையின் பெயரால் செய்ய்யப்படுகின்றவை. அந்த தாய்மைக்காக ஒரு சிறப்பு நாள் ஒதுக்கப்பட்டு, அந்த தியாகத்திற்கு தற்போதைய காலகட்டத்தில் ஒரு மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அன்னையர் தினத்தை கொண்டாடுவதற்கு முதன் முதலில் தன்னார்வமாக முன்வந்து செயல்பட்டது ஆனா ஜாவிஸ் என்ற பெண்மணி ஆவார். தனது தாய் மற்றும் உலகில் உள்ள அனைத்து தாய்மார்களையும் கௌரவிக்க ஒரு நாளை ஒதுக்குவதாக அவர் தன்னை அர்ப்பணித்து செயல்பட்டார். இதன் விளைவாக, 1914 முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர்களைக் கொண்டாட ஒதுக்கப்பட்டது.

இயேசுவின் தாயான மேரி மாதாவை கூட கத்தோலிக்கர்களால் வழிபடப்படுவதற்கு காரணம் அவரது சிறந்த தாய்மைத்துவமே. அதுமட்டுமின்றி பல்வேறு சிலைகள், ஓவியங்கள், சிற்பங்கள், கவிதைகள், புத்தகங்கள் என அனைத்து கலைகளிலும் இந்த தாய்மை பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரபல பாடகி நந்தா மாலினி பூமியின் இருண்ட கருவில் அம்மாதான் நீரூற்று என்று பாடினார், மாக்சிம் கோர்க்கி என்ற சிறந்த எழுத்தாளர் அம்மா என்று நாவலை எழுதியதும், ஜப்பானில் தாய்மார்களுக்காகவே அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டதும், இந்த தாய்மார்களின் உன்னத தாய்மைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவேதான்.

அதனால் குழந்தை பிறந்தது முதல் மிகுந்த துன்பத்தை அனுபவித்த தாய், குழந்தைகள் வளரும் வரை அளவற்ற கஷ்டங்களை அனுபவிப்பது மிகுந்த மகிழ்ச்சியுடன். உலகிற்கு மதிப்புமிக்க அறிஞர்களைப் பெற்றெடுத்த, புகழ்பெற்ற மன்னர்களைப் பெற்றெடுத்த அனைத்து தாய்மார்களுக்கும் அஞ்சலி! அன்னையர் தினமாகிய இத்தினத்தில், உலகில் உள்ள அனைத்து தாய்மார்களும் நீண்ட ஆயுளுடன் வாழ முழுமனதுடன் வாழ்த்துகிறோம்…