பிரண்டிக்ஸ் மேலும் SMART ஆகிறது

காலத்துக்கு காலம் அதற்கேற்றவாறு தன்னை மாற்றி இயங்கி வரும் பிரண்டிக்ஸ், மலர்ந்த இந்தப் புத்தாண்டில் மிகப் பெரிய அடியை எடுத்துவைக்க தயாராக உள்ளது. அது, ஸ்மார்ட்டர் பிரண்டிக்ஸ் கருப்பொருளை மையமாக பயன்படுத்தி டிஜிட்டல்மயமாக்கல் மூலம் அனைத்து பிரண்டிக்ஸ் நிறுவனங்களையும் புதுப்பித்தல் ஆகும். உண்மையிலேயே ஸ்மார்ட்டர் பிரண்டிக்ஸ் என்றால் என்ன? பிரண்டிக்ஸ் குழுமத்தின் இந்த புதிய முயற்சி என்ன? இவற்றை வாசித்து தெரிந்து கொள்வோம்!

ஸ்மார்ட்டர் பிரண்டிக்ஸ் என்ற கருப்பொருள் மூலம், அனைத்து பிரண்டிக்ஸ் நிறுவனங்களின் பணிகள் சகலவற்றையும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து மிக எளிதாகவும், எளிமையாகவும், விரைவாகவும் மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு உலகமும் டிஜிட்டல் மயமாகிக்கொண்டிருக்கும் போது, ​​அந்த புதிய உலகில் இசைவாக்கம் அடைந்து இருக்கவும், அதனுடன் முன்னேறவும் புதிய தொழில்நுட்பத்துடன் நாம் கைகோர்த்து இருப்பதும் பிரண்டிக்ஸுக்கு இன்றியமையாதது ஆகும். அதனால்தான் ஸ்மார்ட்டர் பிரண்டிக்ஸ் என்ற கருப்பொருளை நாம் செயல்படுத்த வேண்டும்.

ஸ்மார்ட்டர் பிரண்டிக்ஸ் கருப்பொருளை நடைமுறைப்படுத்துவதற்கு, எமது பிரண்டிக்ஸ் உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவு, சாதனங்கள் மற்றும் அதற்குத் தேவையான தொழில்நுட்பம் ஆகியவற்றை வழங்கும் முயற்சிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முழு பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் மயமாக்கலும் ஸ்மார்ட்டர் பிரண்டிக்ஸ் என்ற கருப்பொருளின்  மூலம் செய்யப்படுகிறது மற்றும் ஸ்மார்ட் தொழிற்ச்சாலை திட்டமானது, புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மிகவும் தரம் வாய்ந்ததாகவும், திறமையாகவும், பிரண்டிக்ஸ் நிறுவனங்களையும் அவற்றின் உற்பத்தி செயல்முறைகளையும் உலக சந்தையில் போட்டி போடும் அளவிற்கு, உயர் மட்டத்திற்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sஸ்மார்ட்டர் பிரண்டிக்ஸ் என்ற கருப்பொருள் மூலம், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நிறுவனத்தின் பணிகளையும், பில் செலுத்துதல் போன்ற தனிப்பட்ட பணிகளையும் உறுப்பினர்கள் எளிதாகச் செய்து கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்க்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் நிறுவனங்களுக்கு  எதிர்காலத்தில் வழங்குவதற்ற்க்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், எமது பிரண்டிக்ஸ் உறுப்பினர்களுக்கு அதற்க்கு தேவையான பயிற்சிகளை எதிர்காலத்தில் வழங்குவதற்க்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.