இலங்கையின் சிறந்த சிரேஷ்ட அறிஞராகக் கருதப்படும் திரு.முனிதாச குமாரதுங்க அவர்கள் ஒருமுறை கூறியது போல், “புதியவற்றை உருவாக்காத சமூகம், உலகில் உயர்வதில்லை”. மேலும் இச் சொற்றொடரால் விவரிக்கப்பட்டுள்ளபடி பார்த்தோமேயானால், புதியவற்றை உருவாக்காத ஒரு சமூகம் அல்லது தேசம் வளர்ச்சியடையாது. உலகம் இதுவரை வளர்ச்சியடைந்ததற்குக் காரணம் இந்தப் புதிய கண்டுபிடிப்புகள்தான். எனவேதான் புதிய கண்டுபிடிப்புகளை செய்யும் நபர்களை பாராட்ட ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நாள்தான் ஏப்ரல் 20 என்று கூறப்படுகிறது. இந்த நாளில், உலகின் பல நாடுகளில், புதுமைப்பித்தன்களின் கண்டுபிடிப்புக்களை பாராட்டுகின்றனர், அவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்குகின்றனர், மேலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் விழாக்களை ஏற்பாடு செய்கின்றனர்.
பழங்காலத்தில் மனிதன் இரண்டு கற்களைத் தேய்த்து நெருப்பைக் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கைக் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், நாம் இன்னும் பச்சை இறைச்சியினை உண்டு வாழும் ஒரு கூட்டமாக இருந்திருப்போம். இன்றும், சார்லஸ் பாபேஜ் என்ற விஞ்ஞானி கணினியைக் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், இணையத்தைப் பற்றி நமக்குத் தெரியவே வந்திருக்காது. அதுமட்டுமில்லாமல், கடுமையான நோய்களுக்கான மருந்து, புற்று நோய் குணமடைதல் போன்றவற்றை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்றால், இன்று உலகில் பலர் உயிருடன் இல்லாமல் இருக்கலாம். எனவே இந்த விஷயங்களில் இருந்து நமக்குத் தெளிவாகத் தெரியவருவது என்னவென்றால், புதிய கண்டுபிடிப்புக்கள் உலகின் வளர்ச்சிக்கு முக்கியமான அற்புதமான வடிவமைப்புகளாக உள்ளன என்று. உலகம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைவதற்கு புதிய கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் என்பது இப்போது நம் அனைவருக்கும் தெளிவாக புரிகின்ற ஒரு விடயமாகும்.