இயற்கையாகவே தனக்குள் இருக்கும் கலைத்திறனையும், தனது தொழிலையும் ஒன்றோடு ஒன்று கலந்து, பிறர் வாழ்க்கையை வண்ணமயமாக்குவதுடன் தனது வாழ்க்கையையும் வண்ணமயமாக்கிக் கொள்வது எளிதான விடயம் அல்ல. அவ்வாறு செய்யும் மக்கள் மிகவும் அரிது. இம்முறை வியமன் TV யில் “விழித்தெழுந்த நாம்” நிகழ்ச்சியின் ஊடாக எம்முடன் இணைந்தவர் அவ்வாறு இருக்கும் ஒரு நபர், பிரண்டிக்ஸ் குழுமத்தின் மனநல ஆலோசகராக இருக்கும் இவர் பேஷலீ பெர்னாண்டோ.
“எனது வாழ்க்கை மிகவும் வண்ணமயமானது, அதேபோன்று நான் எனது வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றுகிறேன் என்று நினைக்கிறேன். மேலும் நம் வாழ்க்கையை நம்மால் முடிந்தவரை வண்ணமயமாக்கும் திறன் நம் அனைவருக்கும் உள்ளது.” அவர் மிகவும் நேர்மறையான வசனத்துடன் தனது உரையாடலைத் தொடங்கினார்.
“நான் பிறந்தது இலங்கையில், எனது தந்தை பல்கலைக்கழகப் பேராசிரியர், எனது தாய் இல்லத்தரசி.
எனக்கு நான்கு சகோதரிகள். பாடசாலை பருவம் முடிந்த உடனேயே நான் திருமணம் செய்துகொண்டேன்” என்று தன் குடும்ப விவரங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“நான் எனது திருமணத்திற்கு பிறகு வெளிநாடு சென்றேன். அத்துடன் இதுவரை காலமும் நான் சித்திரம் வரையும் பழக்கம் கொண்டிருந்தேன். எனக்கு ஒன்பது வயது இருக்கும் போதிலேயே நான் சித்திரம் வரையப் பழகினேன். எனது பெற்றோர் என்னை சித்திரம் வரைய ஊக்குவித்தார்கள். அதற்காக நான் எனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.” இவரது கலைத்திறனை சிறு வயதிலிருந்தே வளர்த்துக்கொண்டிருந்தார்
“… பிறகு நான் உளவியல் தொடர்பாக கற்க ஆரம்பித்தேன். நான் உளவியல், மனநலம் தொடர்பாக கற்றுக்கொண்டேன். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால் இது நம்மால் என்ன முடியுமோ அதைச் செய்ய முடியும் என்ற நடைமுறை அறிவைக் கொடுத்தது, அதனாலதான் எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது.” அவர் எப்படி உளவியல் கல்வியில் இணைத்துக்கொண்டார் என்பதையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
“சில ஆண்டுகளுக்கு முன்பு பிரண்டிக்ஸ் மனநலம் குறித்த ஒரு திட்டத்தைத் தொடங்கப் போகிறது என்பதை நான் அறிந்தேன், அந்த நேரத்தில் நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன் என்று என்னால் சொல்ல முடியாது. இப்போது நான் இங்கே வேலை செய்கிறேன், எனது குழுவுடன் வேலை செய்கிறேன். ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுடன் இணைந்து செயலாற்ற என்னால் முடிந்தது.” பிரண்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தான் ஆற்றிய பணி குறித்த தனது கருத்துக்களை பெருமையுடன் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அவர் தன்னம்பிக்கை நிறைந்த ஒரு பெண். அவர் அதனை தன் தாயிடமிருந்து பெற்றதாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“எனது தன்னம்பிக்கை என் தாயாரிடமிருந்து என்னுள் வந்தது என்று நான் நினைக்கிறேன். என் அம்மா ஐந்து பெண் பிள்ளைகளையும், பெரும்பாலும் வீட்டில் தங்காமல் சமூக சேவையில் ஈடுபடும் ஒரு கணவனையும் கவனித்துக் கொண்டார்.”
இறுதியில், இந்த உரையாடலைத் ஒரு நேர்மறையான கருத்துடன் ஆரம்பித்தது போலவே, வியமன் TV யின் “விழித்தெழுந்த நாம்” நிகழ்ச்சியினை ஒரு நேர்மறையான சிந்தனையுடன் முடித்தார்.
“ஆரம்பத்தில் நான் கூறியது போல், நம் வாழ்க்கையை நாமே உருவாக்குகிறோம் என்று நினைக்கிறேன். அதை நாமே வண்ணமயமாகவும் ஆக்குகிறோம். எந்தளவிற்கு வரம்புகளை பயன்படுத்தினாலும் நாம் நம் வாழ்க்கையை மேலும் பிரகாசமாக்கிக் கொள்கிறோம்.”