சிறார்களுக்கு பரிசளிக்கப்பட்ட மனுசத்கார மனிதாபிமானம்

பிரண்டிக்ஸ் அங்கத்தவர்களை வலுப்படுத்தவும் அவர்களின் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தவும் பிரண்டிக்ஸ்  “மனுசத்கார”  செயல்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “பிரண்டிக்ஸ் மனுசத்கார திலின” நிகழ்ச்சித்திட்டம் இந்த வருடமும் நடைபெற்றது.

எட்டு ஆண்டுகளாக இயங்கி வரும் “பிரண்டிக்ஸ் மனுசத்கார திலின” /மனிதாபிமானப் பரிசுகள் மூலம் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

“மனுசத்கார திலின” /மனிதாபிமானப் பரிசுகள் என்பதன் முக்கிய நோக்கங்கள், கல்வியறிவு பெற்ற இளம் தலைமுறையினரை எதிர்காலத்திற்காக வழங்குவதும், பிரண்டிக்ஸ் உறுப்பினர்களின் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளின் தொடர்ச்சிக்கு பங்களிப்பதும் ஆகும்.

இவ்வருடம்  “பிரண்டிக்ஸ் மனுசத்கார திலின” நிகழ்ச்சித்திட்டமானது பிரண்டிக்ஸ் ரிதீகம நிறுவனத்தில் இடம்பெற்ற அதேவேலை  இந்நிகழ்ச்சி தொடர்பாக எமது உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் மிகவும் திருப்திகரமான பதிலை வழங்கினர்.