வணக்கம்! நீங்கள் மிகவும் விரும்பும் இரண்டு பேர் இன்று எங்களுடன் இணைந்து உள்ளனர். அவர்கள் தான் பிரண்டிக்ஸ் ரேடியோவின் உங்கள் அன்பான நண்பர்கள் இருவரான ரயன் மற்றும் ரது கொச்சி.
ரயன் தான் பிரண்டிக்ஸ் வானொலியின் நிகழ்ச்சி முகாமையாளர். அனைவராலும் ரயன் என்று அழைக்கப்படும், அவர் சதுரங்க தேனுவர.
அதேபோல் ரது கொச்சி என்று அழைத்தாலும் கடுமை காட்டாத அமைதியான அவர் ருவினி ஹேவகே.
2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரண்டிக்ஸ் வானொலி இதுவரை உங்களுடன் ஒரு நீண்ட பயணம் வந்துள்ளதுடன் பல புதிய மாற்றங்களுடன் தனது உறுப்பினர்களுக்கு பல வித்தியாசமான அனுபவங்களை அளித்துள்ளது.
“நான் Good Morning பிரண்டிக்ஸ் நிகழ்ச்சியினை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 9-12 வரை செய்து வருகிறேன். பிரண்டிக்ஸ் உறுப்பினர்கள் அனுப்பிய வாழ்க்கைக்கான ஒரு முக்கியமான தகவல்களை கூறுவதன் மூலமே காலை நிகழ்ச்சியைத் நான் தொடங்குகிறேன். நிஷா மதுரங்கி இவ்வாறான நல்ல பல விடயங்களை அனுப்பிவைக்கிறார் என்பதை நான் குறிப்பாக உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்” என்று ரயன் எங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, ரது கொச்சி எங்களை கொஞ்சம் குறுக்கிட்டு இவ்வாறு கூறினார்.
“உமேஷா பத்திரனவும் எங்களுக்கு நல்ல கருத்துக்களை அனுப்புகிறார். அவரையும் நினைவு கூர்வோம். அப்போது அது மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கும்.”
ரயன் மீண்டும் தனது பேச்சைத் தொடங்கினார். “ஆம், அவர்களைப் போலவே, நீங்கள் எங்களுக்கு நல்ல கருத்துக்களை தொடர்ந்து அனுப்பி வையுங்கள். நாம் அவற்றை வானொலியில் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.”
செவ்வாய் மற்றும் வியாழன்களில் icom உறுப்பினர்களுடன் நடத்தப்படும் Cool Drive Morning Showவினை எதிர்காலத்தில் புதிய ஆற்றலுடன் நடத்தப்படும் என்பதை உங்கள் இரண்டு அன்பான நண்பர்களும் நினைவுபடுத்தியுள்ளனர்.
வாரத்தில் ஐந்து நாட்களும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பாட்டு கச்சேரி நடத்தும் ரது கொச்சி “வியமன்” எங்களுடன் உங்களைப் பற்றி இவ்வாறு கூறினார் .
“அவர்களைப் பார்க்காவிட்டாலும், அவர்கள் மிகவும் நம்பகமான மற்றும் நட்பான உறவுகள். ஒரு நாள், நான் இல்லை என்றால், அக்கா நீங்கள் ஏன் இன்று வரவில்லை என்று ஒரு மெசேஜ் அனுப்புகிறார்கள். என் குரல் வித்தியாசமாக இருந்தாலும் அதை அவர்கள் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அதைப் பற்றியும் விசாரிக்கிறார்கள். அதனால் நான் பிரண்டிக்ஸ் வானொலி மூலம் ஒரு நேரடி வானொலி அனுபவத்தைப் பெறுகிறேன்.
உங்களிடமிருந்து ஒரு நாளைக்கு குறைந்தது 500 மெசேஜ்களைப் பெறுவதாகவும், சில நாட்களில் சுமார் 4,000 மெசேஜ்களைப் பெறுவதாகவும் ரது கொச்சி எங்களுக்கு நினைவூட்டினார், மேலும் அந்த மெசேஜ்கள் அனைத்தும் அன்பு நிறைந்தவை என்று எங்களிடம் கூறினார்.
பிற்பகல் 3மணி முதல் 5 மணி வரை பிரண்டிக்ஸ் ரேடியோவில் ஒரு புதிய நிகழ்ச்சியை செய்யத் தயாராக இருப்பதாக ரயன் மற்றும் ரது கொச்சி இருவரும் “வியமன்” எங்களிடம் கூறினர். பிரண்டிக்ஸ் வானொலி குழுவானது பிரண்டிக்ஸ் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்காக பல நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் நினைவுபடுத்தினர்.
பெப்ரவரியில் மற்றொரு புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. அதுதான் ‘நாம் பிரண்டிக்ஸ் மீது அன்பு செலுத்துகிறோம்’ நிகழ்ச்சியுகும்.
இந்த விஷயங்களைத் தவிர, பிரண்டிக்ஸ் ஜிங்கில்களை உருவாக்கவும், பாடவும் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. பிராண்டிக்ஸ் வானொலியில் இருந்து இது பற்றிய கூடுதல் தகவல்களை உங்களிடம் கொண்டு வர அவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும், பிராண்டிக்ஸ் உறுப்பினர்களுக்கு வானொலி நிகழ்ச்சிகள் குறித்த பயிற்சி அமர்வுகளை நடத்திய பிரண்டிக்ஸ் நிறுவனம், எதிர்காலத்தில் மேலும் பல பயிற்சி அமர்வுகளை நடத்த எதிர்பார்த்துள்ளதாக ரயன் மற்றும் ரது கொச்சி எங்களிடம் தெரிவித்தனர்.
ரயன் மற்றும் ரது கொச்சி இருவரும் உங்களுடன் பணிபுரிந்தது ஒரு அழகான அனுபவம் என்றார்கள். பிரண்டிக்ஸ் வானொலி மூலம் ஒரு வட்டத்திற்குள் அடைக்கப்படாத நேரடி வானொலி அனுபவத்தைப் பெறவும், ஒரு வேலையைத் தாண்டி ஒரு குடும்பமாக உணரவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர்கள் இருவரும் “வியமன்” எங்களுடன் உரையாடும் பொழுது தெரிவித்தனர்.