வேலையில் ஈடுபடும் எவரும் தங்கள் வேலையில் முடிந்தவரை உயர்ந்து செல்ல விரும்புகிறார்கள். அதற்கு நாம் நமது திறமையையும் அறிவையும் மேலும் அதிகரித்துக்கொள்ள வேண்டும். பிரண்டிக்ஸ் நிவித்திகல ஊழியர்களுக்கு அண்மையில் அதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. இப் பயிற்சி பாசறையின் முக்கிய நோக்கம் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதாகும்.
பிரண்டிக்ஸ் நிவித்திகலை நிறுவனத்தின் மனிதவளத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பயிற்சி பாசறை SEED (Skill Enhancement & Employee Development) என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரண்டிக்ஸ் நிவித்திகலை நிறுவனம் ஆனது இந்த பாடத்திட்டத்தின் மூலம் தகவல் தொடர்பு, பிரச்சனைகளை தீர்ப்பது, நேர முகாமைத்துவம், தலைமைத்துவம், குழு முகாமைத்துவம், படைப்பாற்றல் மற்றும் விளக்கப்படுத்தல் திறன் போன்ற துறைகளை மேம்படுத்துவதற்கு தேவையான சிறந்த பயிற்சிகளை வழங்குவதற்கு உழைத்துள்ளது.
சிரேஷ்ட முகாமையாளர் திரு. பிரியங்க வீரசிங்க, உதவி முகாமையாளர் திருமதி. சுபக்தி தேவகே மற்றும் உதவி முகாமையாளர் திரு. கபில ஹெவகே ஆகியோர் இந்தப் பாடநெறிக்கு தேவையான வளங்களை வழங்கினர் . திறமைகள் நிரம்பிய நாளைய நாளுக்காக நீங்கள் அனைவரும் உங்களுக்கு வழங்கப்படும் இந்தப் பயிற்சிகளை முழுமையாகப் பயன்படுத்தி உங்கள் தொழில் வாழ்க்கையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் உயர் நிலைக்குக் கொண்டு வர உங்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று வியமன் நாம் அனைவரும் பிரார்த்திக்கின்றோம்.