வெற்றிக் கொடிகட்டி தினம் தினம் விழித்தெழும் பிரண்டிக்ஸ் ஏகலை

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவும் பிராண்டிக்ஸ் குழுமத்தின் நிறுவனங்களில் பிரண்டிக்ஸ் ஏகலை பற்றிய தகவல்களை இன்று நாங்கள் உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். வியமன் தொலைக்காட்சியின் ” ஆயத்தனயக்க கதாவக” / “ஒரு நிறுவனத்தின் கதை” மூலம், சர்வதேச அளவில் விருது பெற்ற பிரண்டிக்ஸ் ஏகலை நிறுவனத்த்தின் பணிகள் எவ்வாறு நடந்து வருகிறது என்பதையும், அதன் தொடக்கம் முதல் இன்று வரை அதன் பயணம் குறித்தும் இன்று அறிந்து கொள்ளலாம்.

ஜா-எலை  பிரதேசத்தில் ஏகல கைத்தொழில் வழக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் ஏகல நிறுவனம், 1500 இற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் ஒரு நிறுவனமாகும். இந் நிறுவனம் 2005 ஆம் ஆண்டு பிரண்டிக்ஸ் கேசுவல்வெயார் லிமிட்டெட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நிறுவனத்தில் ஒரு மாதிரி தயாரிப்புத் துறையும் தொடங்கப்பட்டது, அதன் மூலம், நிறுவனம் மேலும் விரிவடைந்தது.

இலங்கை முழுவதிலும் உள்ள 9 உற்பத்தி  நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக இருந்து Brandix Centre of Inspiration எனும் பெயரில் இயங்கி கேசுவல்வெயார் நிறுவனங்களின் தலைமையகமாக பிரண்டிக்ஸ் ஏகல இயங்கி வருகிறது. கொள்வனவாளர்களிடமிருந்து ஆர்டர்களைப் பெறுதல், கொள்வனவாளர்களுக்குத் தேவையான மாதிரிகளைத் தயாரித்தல் மற்றும் இந்தச் செயல்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்தல் ஆகியவை பிரண்டிக்ஸ் ஏகல நிறுவனத்தின் மூலம் நடைமுறை படுத்தபடும் சேவைகளாகும்.

உலகின் முன்னணி கொள்வனவாளர்களின் சிலர் பிரண்டிக்ஸ் ஏகல நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் ஆவர். பிரண்டிக்ஸ் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக, அமெரிக்காவில் உள்ள Gap நிறுவனம், Calvin Klein நிறுவனம், Tommy Hilfiger நிறுவனம் போன்ற சிறந்த வர்த்தக நாமங்கள், தரமான தயாரிப்புகளைப் பெறுவதற்கு பிரண்டிக்ஸ் ஏகல நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது அதன் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையிலாகும்.

பிரண்டிக்ஸ் ஏகலவின் முக்கிய  கொள்வனவாளரான Gap நிறுவனம் வழங்கும் பல விருதுகளை பிரண்டிக்ஸ் ஏகல சுவீகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில், பிராண்டிக்ஸ் சிறந்த விற்பனையாளர் செயல்திறன் விருது (Outstanding Vendor Performance) மற்றும் ஒட்டுமொத்த சிறந்த விற்பனையாளர் விருது (Outstanding Vendor for Overall Excellence) மற்றும் 2017 இல் நடைபெற்ற Gap விநியோகஸ்தர் உச்சிமாநாட்டில் (Gap Supplier Summit) ஆண்டின் சிறந்த சப்ளையர் விருதையும் (Supplier of the Year) பிரண்டிக்ஸ் ஏகல வென்றது.

உயர்மட்ட நிர்வாகத்தின் நட்புறவுடனான செயலடுகள் காரணமாக, நிறுவன ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் கடமைகளை மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. பிரண்டிக்ஸ் ஏகல நிறுவனத்தின் உறுப்பினர்கள் பல சந்தர்ப்பங்களில் மெர்குரி விழாவில்  கிரீடங்களை அணிய முடிந்தது. பிராண்டிக்ஸ் ஏகல நிறுவனம் திறமையான மற்றும் ஆற்றல்மிக்க இளைஞர்களுடன் தொடர்ந்து முன்னேற வியமன் நாம் பிரார்த்திக்கின்றோம்.