காகிதத்தில் எழுதி கடமைகளை செய்து வந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இன்று தொழில்நுட்பம் நம் வேலையில் இனைந்துள்ளது. நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் ஆனது நம் பெரும்பாலான பணிகளை விரல் நுனியில் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. பிரண்டிக்ஸ் என்பது காலத்திற்கு ஏற்றவாறு இஅசைவாக்கம் அடைந்து செயல்படும் நிறுவனம் என்பது உங்களுக்குத் தெரியும். டிஜிட்டல் மயமாகி வரும் உலகில் நாமும் அதற்கேட்ப இசைவாக்கம் அடைந்து இருக்க வேண்டும். பிரண்டிக்ஸ் மனித வள சேவைகள் பிரிவு, தொழில்நுட்பத்துடன் முன்னேறும் ஸ்மார்ட் தலைமுறையுடன் பிரண்டிக்ஸ் குழுமத்தின் பணியை மிகவும் திறமையானதாக மாற்றும் நோக்கத்துடன் OneClick செயலியை (App) அறிமுகப்படுத்தியது.
இந்த பயன்பாட்டின் (App)மூலம், பணியாளர்களும் உறுப்பினர்களும் பிரண்டிக்ஸ் மனிதவள சேவைகள் பற்றிய தகவல்களை விரைவாகப் பெறலாம். OneClick செயலியானது (App) ஷிப்ட்கள், மேலதிக நேரம் தொடர்பான தகவல்கள், விடுப்பு (லீவு) விண்ணப்பம் போன்றவற்றை மிக எளிதாகவும் திறமையாகவும் பெறுவதை சாத்தியமாக்கியுள்ளது. இந்த பயன்பாட்டின் நன்மைகள் என்னவென்றால், விடுமுறைக்கு (லீவு) விண்ணப்பிக்கும் நேரம் குறைக்கப்படுகிறது மற்றும் காகிதத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
பிரண்டிக்ஸ் குழுமத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இப்போது OneClick பயன்பாட்டை (App) நன்கு அறிந்துள்ளனர். அவர்களின் பாராட்டுக்களுக்கு மத்தியில், OneClick செயலி (App) இதுவரை நீண்ட தூரம் வந்துள்ளது மற்றும் பிரண்டிக்ஸ் குழுமம் எதிர்காலத்தில் இந்த பயன்பாடு (App) மூலம் எங்கள் உறுப்பினர்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்க எதிர்பார்த்துள்ளது.
டிஜிட்டல் உலகத்துடன் முன்னேறி வரும் பிரண்டிக்ஸ் குழுமத்தின் அறிமுகங்களில் OneClick செயலியும் (app) ஒன்றாகும். எதிர்காலத்தில் தொழில்நுட்பத்துடன் பணியை எளிதாக்கும் பல வழிகளை அறிமுகப்படுத்த நாம் தயாராக உள்ளோம். காலத்தின் தாளத்துடன் நம்மைப் புதுப்பித்துக் கொண்டு நாமும் இந்த டிஜிட்டல் உலகில் வெற்றிப் பயணத்தை மேற்கொள்வோம்.