அம்மா என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல. அது ஒரு விவரிக்க முடியாத உணர்வாகும். நீ இவ்வுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே தாய் உங்களை வயிற்றில் சுமந்து கொண்டு அளவில்லாத அன்பைக் கொடுத்திருக்கிறாள். பிறக்கும் முன்பிருந்தே உங்களை கவனித்துக் கொண்ட தாய், நீங்கள் இவ்வுலகிற்கு வந்த பிறகு, நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், உங்களை இன்னும் சுமக்கிறாள். அந்த அன்பிற்கு இணையான அன்பு இந்த உலகில் இல்லை. தாயின் அன்பும், தந்தையின் அன்பும் இணைந்தால், குழந்தையின் உலகம் மிகவும் அழகாகிறது.
இன்று உலக அன்னையர் தினம் ஆகும். ஒருவேளை இதைப் படிக்கும் நீங்களும் ஒரு தாயாக இருந்தால், அல்லது நீங்கள் ஒரு அன்பான சித்தி அல்லது அத்தையாக இருந்தால், தாய்மை என்பது மிகவும் அன்பான மற்றும் பொறுப்பான காரியம் என்று நீங்கள் உணரலாம். உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் செய்யும் தியாகம், ஒரு குழந்தைக்கு சிறு நோய் வந்தால் நீங்கள் உணரும் உணர்வு இவை அனைத்தையும் அனுபவித்த ஒருவராக நீங்கள் இருந்தால், ஒரு தாய் உங்களுக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்திருப்பார் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் தாயாக இல்லாவிட்டாலும், பிராண்டிக்ஸ் நிறுவனத்தின் பெருமைக்குரிய வெற்றித்தாரகையாகிய நீங்கள், உங்களுக்காகவும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காகவும் கடினமாக உழைக்கும் ஒரு பொறுப்பான மகளாக வாழ்க்கையின் சுமை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படி ஆயிரம் மடங்கு பாரத்தை சுமந்து கொண்டு அம்மா உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறாள்.